பொதுவாகவே நமது உடலை சுத்தமாக பராமரிப்பது மிக முக்கியம், அதில் குறிப்பாக அந்தரங்கப் பகுதியைச் சுற்றி சுத்தமாக வைத்திருப்பது என்பது ரெம்பவே முக்கியமான விஷயமாகும். காரணம் இது உடலின் மற்ற பாகங்களை விட உணர்திறன் அதிகமாக உள்ள பகுதியாகும். நம்மில் பலருக்கு அந்தரங்க முடியை அகற்றுவதை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன. சிலர் இது சுகாதாரத்திற்கு அவசியம் என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் அதை ஒரு இயற்கையான விஷயம். அதனால் அதை அப்படியே விடுவதுதான் நல்லது என்று கருதுகின்றனர்.
ஆனால் அந்தரங்க முடியை அகற்றுவது உண்மையில் அவசியமா? அதைப் தவிர்ப்பது நோய்களுக்கு வழிவகுக்குமா, அல்லது அதை அகற்றுவது அதிக தீங்கு விளைவிக்குமா? என்பது பற்றி நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள GSVM மருத்துவக் கல்லூரியின் தோல் மருத்துவரான டாக்டர் யுகல் ராஜ்புத் இது குறித்து கூறுகையில் , ”கண்டிப்பாக நாம் அனைவரும் அந்தரங்க முடியை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். அந்தரங்க முடி ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது என்று பலர் நம்பினாலும், இந்த அனுமானம் தவறாக வழிநடத்தும். அதனால் அவற்றை அடிகடி சுத்தம் செய்வதே நல்லது” என்றார் மருத்துவர்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், ”கோடை மற்றும் மழைக்காலங்களில், அந்தரங்க முடியில் படியும் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும். அதனால் அந்த பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் நன்றாக வளரும்.. அதனால் அவ்வப்போது முடியை அகற்றுதல் அவசியம்” என்கிறார்.
மேலும், அந்தரங்க பகுதியை தொடர்ந்து சுத்தம் செய்தால், அது நோய்களுக்கு வழிவகுக்காது. முடி மிக நீளமாக இல்லாவிட்டால், சரியான சுகாதாரம் பராமரிக்கப்படும் வரை, அதை வெட்டாமல் விட்டுவிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும் டாக்டர் ராஜ்புத் குறிப்பிடுகிறார்.
”அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை அகற்றுதல் என்பது நல்லது. அதே வேளையில், அதை எப்படிச் செய்வது என்று தீர்மானிக்கும்போது எச்சரிக்கை தேவை. தவறான நுட்பங்கள் தோல் எரிச்சல், வெட்டுக்கள் மற்றும் தடிப்புகள் ஏற்படலாம். சவரம் செய்தல் அல்லது மெழுகு பூசுதல் சில நேரங்களில் சிறிய வெட்டுக்களுக்கு வழிவகுக்கும்” என்கிறார் மருத்துவர்.
இதனால் ”தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். அதனால் அந்த பகுதியில் முடியை வெட்டும்போது மென்மையாகவும் துல்லியமாகவும் இருப்பது மிகவும் முக்கியம், குறிப்பாக அந்தரங்கப் பகுதியின் உணர்திறன் வாய்ந்த தோலைச் சுற்றி மெதுவாக முடியை அகற்றுவது ரொம்ப முக்கியம்” என்கிறார்.
”அந்தரங்க முடியை வெட்டிய பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். உயர்தர ஷேவிங் கிரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்துவது அவசியம், அதோடு வெட்டுக்காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்களின் அபாயத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ரேஸரையும் பயன்படுத்துவது அவசியம்” என்கிறார் டாக்டர் ராஜ்புத்.
மேலும் ”எப்போதும் முடி வளரும் திசையில் ஷேவ் செய்வதுதான் நல்லது அத்துடன், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் எரிச்சலைத் தடுக்கவும் ஈரப்பதமூட்டும் லோஷனைப் பயன்படுத்தினால் நல்லது” என்கிறார் மருத்துவர்.
ஆம் அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள், அந்தரங்க முடி அகற்றுதலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. தோல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அல்லது எரிச்சல் குறித்த கவலைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. உங்கள் தோல் வகையைப் பொறுத்து ஒரு தோல் மருத்துவர் பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள முறைகளை பரிந்துரைக்க முடியும்.
அந்தரங்க முடியை அகற்றுவது ஆரோக்கியமான சீர்ப்படுத்தும் வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து காயத்தைத் தவிர்க்க சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்றும் வழக்கமான சுத்தம் செய்தல் மற்றும் சரியான முடி அகற்றும் நுட்பங்களை பயன்படுத்துதல் தொற்று மற்றும் தோல் சம்பந்தமாக வரும் பிரச்சனைகளை குறைக்கும், எனவே அதை கவனமாக அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் மருத்துவர்..