கடந்த சில நாட்களாக இன்று பூமி முழுவதும் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது.
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும் . அப்போது சந்திரன் சூரியனின் ஒளியை பூமி மீது படவிடாமல் தடுத்து, சூரியனை மறைக்கிறது. இந்தநிலையில், இன்று பூமி முழுவதும் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பரவி வருகிறது. இதற்கு நாசா மறுப்பு தெரிவித்துள்ளது.
இது 100 வருடங்களில் ஒருமுறை நிகழும் அரிய சந்திரதோற்றம் என கூறப்பட்டாலும், இது தவறான தகவல் என நாசா விஞ்ஞானிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 2, 2027-ம் ஆண்டு நிகழ இருக்கும் சூரிய கிரகணம்தான் இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம்.
அடுத்த சூரிய கிரகணம் 2025 செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், அது கூட சிறிய அளவில் காணப்படும். மிக நீண்ட சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஏற்படும், ஆனால் அப்போதும் பூமி முழுவதும் இருளில் மூழ்கப்போவதில்லை . இந்த சூரிய கிரகணம் "நூற்றாண்டின் கிரகணம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடி வரை நீடிக்க உள்ளது. ஆனாலும் இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது. ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து. சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஆனாலும், இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.