chatgpt launch new version  google - reuters
டெக்

GPT-ன் NEW VERSION! சைபர் அட்டாக்கை தடுக்கும் AI.. OpenAI-யின் புதிய முயற்சி!

ஹேக்கர்கள் ஊடுருவுவதற்கு முன்பே சைபர் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியும் GPT-6 Cyber AI மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது OpenAI.

PT WEB

சைபர் பாதுகாப்புக்காக OpenAI உருவாக்கிய GPT-6 Cyber, மென்பொருளின் பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறிந்து, ஹேக்கர்களின் தாக்குதல்களை தடுக்க உதவுகிறது. Firefox உலாவியில் 81 குறைபாடுகளை கண்டறிந்த இந்த AI, வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய சாதனமாக மாறியுள்ளது.

ஒரு சைபர் தாக்குதல் நடப்பதற்கு முன்பே, ஹேக்கர்கள் எப்படி ஊடுருவுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்தத் தாக்குதலையே தடுக்கும் அளவிற்கு AI தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. சைபர் பாதுகாப்புத் துறையில் ஹேக்கர்களுக்கே சவால் விடும் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது AI உலகம்.

சைபர் பாதுகாப்புக்காக GPT-6 Cyber என்ற புதிய AI மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ChatGPT-யை உருவாக்கிய OpenAI நிறுவனம்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் மென்பொருட்களில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கலாம். இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்தித்தான் ஹேக்கர்கள் மென்பொருட்களுக்குள் ஊடுருவி தகவல்களைத் திருடுவார்கள். இத்தகைய குறைபாடுகளைக் கண்டறிவதுதான் GPT-6 Cyber-ன் முக்கியப் பணியாகும்.

chat gpt launch GPT-6 Cyber for cyber security

ஆனால், இந்த AI குறைபாடுகளைக் கண்டறிவதோடு மட்டும் நிற்காமல், அந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி உண்மையிலேயே ஒரு ஹேக்கரால் மென்பொருளுக்குள் நுழைய முடியுமா என்பதையும் சோதித்துப் பார்க்கும். இதன்மூலம், தாக்குதல் நடப்பதற்கு முன்பே நிறுவனங்கள் தங்கள் மென்பொருளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும்.

இதற்காக நடத்தப்பட்ட சோதனையில், Firefox இணைய உலாவியில் இதுவரை யாரும் கண்டுபிடிக்காத 81 பாதுகாப்புக் குறைபாடுகளை GPT-6 Cyber கண்டறிந்துள்ளது. இதை OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் குறைபாடுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என Firefox-ஐ உருவாக்கிய Mozilla நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல், கணினிகளை இயக்க உதவும் Linux மென்பொருளிலும் இந்த AI சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஹேக்கர்கள் கணினிக்குள் நுழைய எந்தெந்த வழிகளைப் பயன்படுத்த முடியும் என்பதை 948 விதங்களில் சோதித்துப் பார்த்துள்ளது. அவற்றில் 588 வழிகள், இதுவரை யாரும் கண்டுபிடிக்காத மென்பொருள் குறைபாடுகளைப் பயன்படுத்தி கணினிக்குள் நுழையக்கூடியவை என OpenAI தெரிவித்துள்ளது.

chatgpt new version

இந்த AI-யால் சைபர் தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாலும், இதைத் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்தினால் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆபத்து அளவில் இந்த AI-க்கு Critical என்ற மிக உயர்ந்த மதிப்பீட்டை OpenAI வழங்கியுள்ளது.

இதனால், இந்த AI மாடலை அனைவரும் பயன்படுத்த முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த OpenAI அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக, வங்கிகள், அரசு அமைப்புகள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சைபர் பாதுகாப்புக் குழுக்களுக்கு இந்த AI உதவியாக இருக்கும். ஆனால், OpenAI அனுமதி வழங்கிய நிறுவனங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.