ஸ்மார்ட்போன் விலை உயரப்போகிறதா? AI-யால் வந்த புதிய சிக்கல்!
நீங்க ஸ்மார்ட்போன் வாங்கற ஐடியாவுல இருக்கீங்களா? அப்படின்னா, இந்தச் செய்தியைக் கொஞ்சம் கவனிங்க. ஏன்னா, ஸ்மார்ட்போன்களின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக AI தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அன்றாட வேலைகள் தொடங்கி அலுவலகப் பணிகள் வரை AI பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், இப்போது AI-யின் தாக்கம் நம்முடைய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அடுத்தடுத்த மாதங்களில் ஸ்மார்ட் போனின் விலை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது Memory சிப்ஸ் தான்.. ChatGPT போன்ற AI சேவைகளை இயக்குவதற்கு மிகப்பெரிய Data Centres தேவைப்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான சர்வர்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு சர்வரிலும் தகவல்களைச் சேமிக்கவும், வேகமாகச் செயல்படுத்தவும் அதிக அளவில் Memory Chips தேவைப்படுகின்றன.
இதனால் AI நிறுவனங்கள் இந்தச் சிப்களை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இதே சிப்கள்தான் ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், AI நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு உற்பத்தி இல்லாததால் சிப்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
இது ஸ்மார்ட்போன் தயாரிப்புச் செலவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான Jefferies கணிப்பின்படி, ஒரு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் Memory Chips-க்காக 2025-ல் சுமார் 20 டாலர் செலவானது. ஆனால், தற்போது அதற்கான செலவு 60 முதல் 65 டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது
குறிப்பாக, 200 டாலருக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பட்ஜெட் Android போன்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால், இந்தப் போன்களின் மொத்த உதிரிபாகச் செலவில் சுமார் 60 சதவீதம் Memory-க்காகவே செலவாகிறது. இதனால் இந்தப் பிரிவு ஸ்மார்ட்போன்களின் விலை சுமார் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என Jefferies கணித்துள்ளது.
இந்த விலை உயர்வு ஸ்மார்ட்போன் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 2026-ல் சுமார் 106.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2027-ல் இந்த எண்ணிக்கை 91.1 கோடியாகக் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையே கணிசமாகச் சரியக்கூடும்
முக்கியமாக, குறைந்த விலை போன்களின் விற்பனைதான் அதிகம் பாதிக்கப்படலாம். 2025-ல் 100 போன்கள் விற்பனையானால், அதில் 42 போன்கள் பட்ஜெட் ரகமாக இருந்திருக்கும். ஆனால், 2026-ல் இந்த எண்ணிக்கை 24 ஆகக் குறையலாம். மறுபக்கம், 600 டாலருக்கும் அதிகமான விலை கொண்ட பிரீமியம் போன்களின் சந்தைப் பங்கு 29 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயரக்கூடும். அதாவது, குறைந்த விலை போன்களின் சந்தை சுருங்கி, அதிக விலை கொண்ட போன்களின் சந்தை விரிவடையலாம்.
