அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயோ இந்த ஐபோன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 7.8 இன்ச் Foldable ஸ்க்ரீனுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐபோன், டைட்டேனியம் மற்றும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உலோகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட பேட்டரிக்கள் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த Foldable ஐபோனை, 2 லட்சம் ரூபாய்க்கு விற்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தவிலை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 ப்ரொ மேக்ஸை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம்.
இதோடு, 18.8 இன்ச் Foldable Display உடன் மற்றொரு Foldable ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 18.8 இன்ச் போன் ஐபேட் ப்ரோவை விட மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.