மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம்; கூடாரங்களை அகற்றிய காவல்துறை
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், டெல்லி - பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல் உள்ளிட்டோர், விவசாய சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த குழுவினரை சந்தித்துவிட்டு மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பிய விவசாய சங்க தலைவர் தல்வேவால், மொஹாலியில் கைது செய்யப்பட்டார். தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவரை, ஆம்புலன்ஸிலேயே போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பஞ்சாப் - ஹரியானாவின் எல்லைப்பகுதிகள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், அங்கு விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.