ஜெயலலிதா, நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அன்று ஜெயலிலதா புகழ் பாடியவர் இன்று பாஜக மாநில தலைவர்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்!

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

திருநெல்வேலி பகுதி மக்களால் பண்ணையார் என்று அழைக்கப்படுபவர் நயினார் நாகேந்திரன்..,  MGRன் தீவிர விசுவாசியான இவர் 1989 ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்., கட்சிக்காக கடுமையாக உழைத்ததன் பலனாக  பணகுடி அதிமுக நகரச் செயலாளர் பதவி கிடைத்தது., அதன் பின் அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளராக அவரை அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்தார். மேலும், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவிலும் இருந்தார் நயினார் நாகேந்திரன்., அவருக்கு ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என்ற அதிமுகவின் உயர் பொறுப்பும் நயினாரை தேடி வந்தது..  

நயினார் நாகேந்திரன்

பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனை முதல் முறையாக 2001 ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா.., 42765 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்ற அவருக்கு மின்சாரம், தொழித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக சட்டமன்றத்தில் அமர வைத்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.., அதன் பின்  2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெறும்  606 வாக்குகள் வித்தியாசம் தோல்வியடைந்தார்.., குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோலிவியடைந்து விட்டோம் என்ற வேதனையில் அதிமுகவில் கள பணியாற்றிய  நயினாருக்கு மீண்டும்  ஒரு வாய்ப்பாக 2011 ம் ஆண்டு அமைந்தது..,

ஆமாம் அவருக்கு 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார் கொடுத்த வாய்ப்பை கட்சிதமாக  மாற்றிய நயினார்  அந்த தேர்தலில் வெற்றி பெற்றார் ஆனால் அவருக்கு ஒரு ஏமாற்றம் மட்டுமே அமைந்தது காரணம்அவருக்கு  அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது… கொடுத்த வேலைகளை கட்சிதமாக செய்து ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக சுற்றி வந்த நயினார்  மீண்டும் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெறும்  601 சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்வியால் மன உளைச்சலில் இருந்த அவருக்கு மேலும் பேரிடியாக ஜெயலலிதாவின் மறைவும் அதிமுகவின் உட்கட்சி பூசலும் அமைந்தது..,

அதிமுகவின் உட்கட்சி பூசல் காரணமாக அக்கட்சியில்  உள்ள முக்கிய புள்ளிகளும் தொண்டர்கள் பலரும் சசிகலா அணி -  EPS அணி என இந்த இரண்டு அணிகளுக்கு தாவி தாவி பரபரப்பான அரசியல் சூழல் காணப்பட்ட நிலையில் நயினார் நாகேந்திரன்  2017ம் ஆண்டு  அதிமுகவிலிருந்து விலகி பாஜக வில் சேர்ந்தார்.,  பாஜகவில் சேர்ந்த அவருக்கு  தமிழ்நாடு பாஜக வின் துணை தலைவர  பதவியும் கிடைத்தது... பாஜகவில் இணைந்த அவர் தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெரும் கூட்டங்களில் பேசும் போது  அவரின் அரசியல் ஆசானாக இந்த  ஜெயலலிதாவின் புகழையும் பாடிவந்தார்.., அதிமுகவில் இருந்து வந்த நயினார் இன்னும் ஜெயின் புகழை படிவருகின்றார் என பாஜகவினர் பலரும் அவ்வப்போது பேசிய வந்த நிலையில்  அதிமுகவை போன்று பாஜகவில் இணைந்த பின்னும் பரபரப்பாக நெல்லையை சுற்றி வளம் வந்த நயினார்..,  2019ஆம் ஆண்டு பாஜக சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வி அடைந்தார். மேலும் 2021 ல் அமைந்த அதிமுக பாஜக கூட்டணியில் நெல்லையில் களம்  கண்டு  வெற்றி பெற்று பாஜக உறுப்பினராக சட்டமன்றத்தில் நுழைந்ததார் நயினார் ..,   பாஜக சார்பாக 4 பேர் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சராக இருந்த காரணத்தால் தமிழக சட்டமன்றத்தில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

நயினார் நாகேந்திரன்

ஆசை யாரைத்தான் விட்டு வைக்கவில்லை MLAவாக இருந்த நயினார் MP ஆக வேன்றும்  என்று  தனது தொந்த தொகுதியான நெல்லையில் போட்டியிட பல்வேறு காய்களை நகர்த்தினார்.., ஏற்கனவே தமிழிசையும் ,சரத்குமாரும் அந்த தொகுதியை எப்படியாவது கைபற்றிட வேண்டும் என துடித்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில்பல்வேறு எதிர்ப்புகளை மீறி நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்… இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்து வருகின்றார்… இந்த நிலையில்தான் தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முடிவுசெய்தது . இதற்காக தமிழக பாஜக தலைவராக தற்போது இருக்கும் அண்ணாமலை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் அவை தற்போது உறுதியாகியுள்ளது.. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்த நயினார்  அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகியுள்ளார் நயினார் நாகேந்தரன்... திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் பாஜக கால் பதித்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கியிருப்பதால் அதனை மேலும் வலுவாக்கி  தென் மாவட்டங்களில் இருந்து பெரும் இளைஞர் பட்டாளத்தை ஈர்க்கும் விதத்திலும் இந்த நகர்வு அமையும் என பாஜக மத்தியில் பார்க்கப்படுகின்றது..,MGR ன் ஈர்ப்பாலும் ஜெயலலிதாவின் விசுவாசத்தாலும்  தொடங்கிய நயினாரின் அரசியல் பயணம் தற்போது அவரை பாஜகவின் மாநில தலைவர் பதவி வரை கொண்டுவந்திருக்கின்றது.., இவரின் இந்த பயணம் எப்படி அமைய போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்..