nainar nagendran says on thanks all bjp chiefs
nainar nagendran says on thanks all bjp chiefs PT

அண்ணாமலை உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை | “அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” - நயினார் நாகேந்திரன்!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஒருமனதாக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தம்மைப் பரிந்துரை 10 பேருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Published on

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த விதி மாற்றப்பட்டது.

இந்த நிலையில், மாநில தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலின்போது நயினார் நாகேந்திரன் மட்டும் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களான அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் இணைந்து நயினார் நாகேந்திரனை தலைவராகப் பரிந்துரை செய்து விருப்ப மனு அளித்திருந்தனர். அதன்படி, பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து நயினார் நாகேந்திரன், “நான் விருப்ப மனுவை மட்டுமே தாக்கல் செய்துள்ளேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

nainar nagendran says on thanks all bjp chiefs
தமிழக பாஜக தலைவர் | போட்டியின்றி தேர்வான நயினார் நாகேந்திரன்.. விடைபெறுகிறார் அண்ணாமலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com