முதல்வர் ஸ்டாலின்  pt desk
தமிழ்நாடு

"கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை" - கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை என நிரூபித்துக் காட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை என நிரூபித்துக் காட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைய சேவை மூலம் இணைத்து, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின், பணத்தை தண்ணீரைப் போல் செலவழிப்பதாக கூறுவார்கள், ஆனால், தண்ணீரைதான், பணம் போன்று பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும் என்று கூறினார். பேரிடர் கால இடர்பாடுகளை குறைக்க ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தார்களா என ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

நம்ம ஊரு நம்ம அரசு என்ற பெயரில், கிராமங்களில் தேவைகளை அறியும் புதிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் 3 தீர்மானங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கோவை வாரப்பட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற இளமுருகன் என்பவர் முதல்வருடன் கலந்துரையாடினார். அப்போது, தொகுப்பு வீடுகள் சீரமைப்பு, சாலை வசதி, பேருந்து சேவை நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.