தவெக தலைவர் விஜய், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். விஜயின் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தவெகவினர் குவிந்துவருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 3ஆவது கட்டமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்.
3-ம் கட்ட தேர்தல் பர்ப்புரைக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், அதன்பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் நோக்கி செல்லவிருக்கிறார். அங்கு நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகே பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.
இந்நிலையில் நாமக்கல்லில் விஜயின் பரப்புரையை பார்க்க இரவிலிருந்தே தவெக ஆண், பெண் ஆதரவாளர்கள் குவிந்துவருகின்றனர்.
இந்தசூழலில் நாமக்கல்லில் அதிகாலையிலேயே வந்து காத்திருக்கும் தவெக தொண்டர்கள் பேசுகையில், விடியற்காலை 2 மணி, 4 மணியிலிருந்தே நாங்கள் இங்கு இருக்கிறோம், கண்டிப்பாக தவெக தலைவர் விஜய் முதலைமைச்சராக வருவார் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
தவெக பெண்கள் கூறுகையில் எங்களுக்கு எதுவுமே வேணாம், விஜய் அண்ணா வந்தாபோதும், நாமக்கல்ல இருக்க மக்களோட பிரச்சனை குறித்து அண்ணாவுக்கு தெரியும், அதைஎல்லாம் சரிபண்ணு கொடுப்பார்ன்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு என தெரிவித்தனர். அங்கு வந்த சிறுவர்கள் ‘எங்களுக்கு சாப்பாடே வேணாம், எங்க விஜய் அண்ணா மட்டும் போதும் என்றனர்.