ஜனநாயகன் வெற்றிபெறவேண்டும் என தவெகவினர் பூஜை pt
தமிழ்நாடு

ஜனநாயகன் வெற்றிபெறவேண்டும்.. கோவிலில் பூஜை செய்து கிடா வெட்டிய தவெகவினர்!

ஜனநாயகன் படம் வெளியாகி வெற்றி பெற வேண்டி கோவிலில் பூஜை செய்து ஆடு வெட்டிய தவெகவினர்.

PT WEB

கிருஷ்ணகிரி அருகே, நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெறவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதல்வராக வேண்டியும், 108 தேங்காய் உடைத்து, கிடா வெட்டி, அன்னதானம் வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெறவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்க வேண்டி தவெகவினர் 108 தேங்காய் உடைத்து, கிடா வெட்டி, அன்னதானம் வழங்கிய நிகழ்வு கிருஷ்ணகிரி அருகே நடந்துள்ளது.

ஜனநாயகன் வெற்றிபெறவேண்டும் என தவெகவினர் பூஜை

இன்று வெளியாக இருந்த நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத உள்ளிட்ட காரணங்களால் வெளியாகாமல் தடைபட்டுள்ளது. இந்த தடைகள் நீங்கி ஜனநாயகன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி காணவும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையில் அமையும் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டியும், தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள குண்டு குறுக்கி கிராமத்தில் அமைந்துள்ள கங்கம்மா, மாரியம்மா, முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஜனநாயகன் வெற்றிபெறவேண்டும் என தவெகவினர் பூஜை

தவெக மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் 108 தேங்காய்கள் உடைத்தும், கிடா வெட்டியும், சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி வேண்டுதலை முன் வைத்தனர். தொடர்ந்து விஜய் படத்திற்கு பாலபிஷேகம் செய்து, திருஷ்டி சுற்றி, அப்பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.