விஜய், சீனிவாச சேதுபதி web
தமிழ்நாடு

1 வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. திமுக வேட்பாளரை வீழ்த்திய தவெக வேட்பாளர்!

திருபத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி..

Rishan Vengai

தமிழக அரசியலில் திமுக-அதிமுக இருமுனைப் போட்டியை உடைத்து, விஜயின் தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் 35% வாக்குகளுடன் 108 இடங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. 1967க்குப் பிறகு மூன்றாவது கட்சியாக தனி பெரும்பான்மை பெற்ற இந்த சாதனையில், சிவகங்கை திருப்பத்தூரில் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளர் பெரியகருப்பனை வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்திய வெற்றி தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.

தவெக மாநாடு விஜய்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தன.

இந்தசூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்குதள்ளியிருக்கும் தவெக 35% சதவீதம் வாக்குசதவீதத்தை பதிவுசெய்து 108 தொகுதிகளில் வெற்றியை பெற்று வரலாறு படைத்துள்ளது. 1967-க்கு பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சி அல்லாமல் 3வதாக ஒரு கட்சி தனிம்பெரும்பான்மை பெருவது இதுவே முதல்முறை.

1 வாக்கில் வென்ற தவெக வேட்பாளர்..

வாக்கு எண்ணிக்கையின் இறுதிவரை 107 இடங்களில் மட்டுமே தவெக வெற்றிபெற்றுள்ளது என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி தவெகவின் வெற்றியை 108ஆக மாற்றுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே இறுதிவரை இழுபறி நீடித்த நிலையில், இறுதிசுற்றில் இருவருக்கும் இடையே 30 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இப்படியான பரபரப்பான சூழலில் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றியை தட்டிச்சென்று வரலாறு படைத்தார். சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்றார்.