MP TR Balu pt desk
தமிழ்நாடு

தமிழக ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

தமிழக ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு விரைந்து முடித்திட வேண்டும் சுணக்கமாக செயல்படக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.

PT WEB

சென்னை தென்னக ரயில்வே அலுவலகத்தில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, சசிகாந்த செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், க.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது தொகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் நிறைவு பெறாமல் உள்ள பணிகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Rail

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியபோது....

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொருத்தவரை வடநாட்டில் இருந்து தாம்பரத்திற்கு வரக்கூடிய 6 ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. இது குறித்து நான் எனது கருத்துக்களை தெரிவித்தேன். அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டிய ஏலகிரி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகள் இருவழியிலும் நிறுத்தப்படுவதில்லை, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற செயல்:

பல மேம்பாலங்கள் இந்த தொகுதியில் போட வேண்டியது ஐந்தாறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்படுகிற திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறோம். தென்னக ரயில்வே சுணக்கம் காட்டி இருப்பதை எடுத்துக் கூறியும், இனிமேல் சுணக்கம் இல்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் என சொல்லி இருக்கிறோம். லோகோ டிரைவர்கள், இன்ஜின் டிரைவருக்கு இன்ஜினில் ஒரு சின்ன அறை கொடுத்து அதில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். ரயில்வே துறை ஆராய்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற செயல் உடனடியாக செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வந்தே பாரத்

வந்தே பாரத் ரயில் குறித்த நேரத்தில் போகிறது. பயணிகள் வசதியாக போகிறார்கள்:

இந்தியாவில் உள்ளது பல விஷயங்கள் பாராட்டப்பட வேண்டி இருக்கிறது. வந்தே பாரத் ரயில் குறித்த நேரத்தில் போகிறது. பயணிகள் வசதியாக போகிறார்கள். அதில், சில குறைபாடுகள் இருக்கிறது. அவை நிவர்த்தி செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஆண்டு என்ன கோரிக்கை வைத்தார்கள் எத்தனை சதவீதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என நான் கேட்டேன். அதற்கு சரியான பதில் கிடையாது. தொடர்ந்து கேட்கப்படக் கூடிய கேள்விகளுக்கு நியாயமாக பதில் சொல்ல அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கிரிராஜன் என்னிடம் வந்து இந்த கட்டடத்தைச் சுற்றி இந்தியை தமிழில் எழுதியிருக்கிறார்கள் என கேட்டார். இது முதலில் கண்டனத்துக்குரியது தமிழ்நாட்டில் இருக்கின்ற அலுவலகத்தில் இதுபோல் எங்கும் பார்த்ததில்லை என்று எம்பி டிஆர்.பாலு தெரிவித்தார்.