திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்pt desk
தமிழ்நாடு
கடலூர் | சுட்டெரிக்கும் சூரியன் சூடான வாகனம் - திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
திட்டக்குடி அருகே வெப்பம் காரணமாக இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: கே.ஆர்.ராஜா,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கடை தெருவில் லிங்கேஷ் (18) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். இதையடுத்து வெளியே வந்த அவர், தனது பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது வண்டியில் இருந்து புகை வந்ததை அடுத்து கீழே இறங்கியுள்ளார்.
இதையடுத்து உடனே வாகனத்தில் தீப்பற்றி மள மளவென எரிபத் தொடங்கியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதுக்குள் 75 சதவீதம் வாகனம் எரிந்து நாசமானது. கடும் வெப்பம் காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்தது.