விஜய் - செல்லூர் ராஜூ pt
தமிழ்நாடு

”விஜயின் இமேஜ்-ஐ கெடுக்க திமுக சதி செய்கிறது” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தவெக தலைவர் விஜயின் விவாகரத்து வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

Premkumar S

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் சங்கீதா, நடிகை ஒருவருடன் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

விஜய் - சங்கீதா

மேலும், விஜய் விவகாரத்து வழங்க மறுப்பதாகவும், தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், சமீபத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் விஜயும் திரிஷாவும் இணைந்து பங்கேற்றது மேலும், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் தான், விஜய்க்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ விஜயின் விவாகரத்து வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெல்லும்; திமுகவின் சகாப்தம் முடியும். திமுக ஒரு மூழ்கும் கப்பல் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து விஜயின் விவாகரத்து விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தவெக தலைவர் விஜய்-ன் இமேஜ்-ஐ கெடுப்பதற்காக  திமுக பல வேலைகளை செய்துவருகிறது. இதேபோன்று அதிமுகவிற்கு எதிராகவும் திமுக பல வேலைகளை செய்ததது எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.