விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மிரட்டுவதாக சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனு
விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மிரட்டுவதாக சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனுweb

”மிரட்டல் விடுகின்றனர்..” விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த மனைவி சங்கீதா!

விஜய் விவாகரத்து தர மறுப்பதாகவும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் எனவும் விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Published on
Summary

விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், விஜய் விவாகரத்து வழங்க மறுப்பதாகவும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் சங்கீதா, நடிகை ஒருவருடன் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் விஜய் விவகாரத்து வழங்க மறுப்பதாகவும், தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Vijay Divorce Rumors Who Is His Wife Sangeetha?
விஜய், சங்கீதாஎக்ஸ் தளம்

இந்தசூழலில் சங்கீதா விவாகரத்து மனுத்தாக்கல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்தசூழலில் விஜய், நடிகை த்ரிஷா உடன் ஒரே நிற ஆடையுடன் பொதுவெளியில் தோன்றியபிறது, விஜயின் ஆதரவாளர்களே விஜய்க்கு எதிராக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நீதிமன்றத்தில் மகளிர் தினமான இன்று புதிய மனுத்தாக்கல் ஒன்றை வழங்கியுள்ளார் விஜயின் மனைவி சங்கீதா.

விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மிரட்டுவதாக சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனு
ஒரே கலர் DRESS.. திருமண விழாவுக்கு இணைந்துவந்த விஜய் - த்ரிஷா.. #ViralVideo

மிரட்டல் விடுகின்றனர்..

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கும் விஜயின் மனைவி சங்கீதா, ’விஜயின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும் பிரிந்து செல்ல மறுக்கிறார். விவாகரத்து மனு தாக்கல் செய்தால் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல் விடுகின்றனர்.

பிரிட்டன் குடியுரிமை உள்ள தனக்கு சென்னையில் தனியாக வீடு இல்லை, விவாகரத்து கிடைக்கும் வரை விஜய் வீட்டில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது. விஜயின் நீலாங்கரை வீட்டில் என்னை அனுமதிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய், எனக்கும் என் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும்’ என தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மிரட்டுவதாக சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனு
’மனைவி, மகளை விரட்டிவிட்டு.. மகளிர் தினவிழா’ - விஜயை விமர்சித்த இயக்குநர் அமீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com