பெரியார், சீமான் pt web
தமிழ்நாடு

மீண்டும் பெரியார்.. திமுக மீதான கடுமையான விமர்சனம்.. ஈரோடு இடைத்தேர்தலை முன்வைத்து சீமான் கருத்து

“கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளைக் கொட்டி வாக்கைப் பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

விழுப்புரம் அருகேயுள்ள பூரி குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கள் விடுதலை இயக்க தலைவர் நல்லசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் போன்றோர் கலந்து கொண்டனர்.

அப்போது பனைமரத்திலிருந்து கள் இறக்கி பனைமரத்திற்கு படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து கள் இயக்க தலைவர் நல்லசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைபாளர் சீமான் மாநாட்டு மேடையிலையே கள்ளை சந்தைப்படுத்தும் விதமாக கள்ளை பனை ஓலையில் உற்றி பருகினர்.

கள் இறக்கினால் ஒரு லட்சம் அபராதம் மூன்று ஆண்டு சிறை தண்டனை சட்டம் திருத்தம் நிறைவேற்றியது கண்டத்துக்குறியது என்பன போன்ற 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் களம் எங்களுக்கானது என்றுதான் நாங்கள் நினைப்போம். எந்த களமாக இருந்தாலும் எங்களுடையதாக மாற்றுவதுவதுதான் எங்களது களப்பணி. திமுகவை எதிர்த்து நான் ஒருவன்தானே நிற்கிறேன். நீங்கள் இத்தனை அமைச்சர்கள், இத்தனை கட்சிகளை கூட்டணியாக வைத்துக்கொண்டு எதற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கின்றீர்கள்.

பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள் பெரியாரைப் பேசியே வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என ஒருமுறை பேசுங்களேன். பெரியாரைச் சொல்லி வாக்கு வாங்கப்போகிறீர்களா? காந்தி படத்தினைக் காட்டி வாக்கு வாங்கப்போகிறீர்களா? கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளைக் கொட்டி வாக்கைப் பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது” எனத் தெரிவித்தார்.

சீமான் பேசிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்