german ambassador says donald trump will erode usa democracy
டொனால்டு ட்ரம்ப்pt web

“தமக்கு சாதகமாக ட்ரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை மாற்றுவார்” - ஜெர்மனி தூதர் எச்சரிக்கை!

“ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க சட்ட அமலாக்கத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும்” என்று அமெரிக்காவிற்கான ஜெர்மனி தூதர் ஆண்ட்ரியாஸ் மைக்கேலிஸ் எச்சரித்துள்ளார்.
Published on

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றுள்ளார். ஆனால் அவர் பதவியேற்பதற்கு முன்னதாகவே பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது அதைச் செயல்படுத்தும் வகையில் அதன் உத்தரவுகளைப் பிறப்பிக்க இருக்கிறார். இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஒருவித அச்சத்தில் உள்ளன.

இந்த நிலையில், “ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க சட்ட அமலாக்கத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும்” என்று அமெரிக்காவிற்கான ஜெர்மனி தூதர் ஆண்ட்ரியாஸ் மைக்கேலிஸ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, “ஊடகங்களும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுக்கு இணையான அதிகாரத்தை ட்ரம்ப் அரசுக்கு வழங்கும்” என ரகசிய ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

german ambassador says donald trump will erode usa democracy
ட்ரம்ப்pt web

கடந்த ஜனவரி 14ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆவணத்தில், ஜெர்மனி தூதர் ஆண்ட்ரியாஸ் மைக்கேலிஸ் கையெழுத்திட்டுள்ளார். அதில் அவர், “டொனால்டு ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான திட்டம் என்பது அதிகபட்ச இடையூறுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தங்களுக்குச் சாதகமாக அரசியலமைப்பைத் திருத்தம் செய்வதே ஆகும். அதனூடாக காங்கிரஸ் மற்றும் பெடரல் மாகாணங்கள் பலவீனப்படுத்தப்படும். இதன்மூலம் அதிபரின் அதிகபட்ச அதிகாரமே இலக்காகக் கருதப்படும்.

german ambassador says donald trump will erode usa democracy
அமெரிக்கா | 47ஆவது அதிபராக பதவியேற்றார் டொனால்டு ட்ரம்ப்!

அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் பெருமளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும். தவிர, சட்டமன்றம், சட்ட அமலாக்கம் மற்றும் ஊடகங்கள் அவற்றின் சுதந்திரத்தைப் பறித்து, அரசியல் பிரிவினை தவறாகப் பயன்படுத்தப்படும், பெரும் தொழில்நுட்ப முதலாளிகளுக்கு கூட்டு நிர்வாக அதிகாரம் வழங்கப்படும்.

ட்ரம்ப் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நீதித்துறை மற்றும் FBI மீதான கட்டுப்பாடுகளை விதிப்பார். இதில் பெருமளவிலான நாடு கடத்தல்கள், எதிரிகளாகக் கருதப்படுபவர்களுக்கு எதிராகப் பழிவாங்குதல் மற்றும் சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுதல் ஆகியவை அடங்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com