உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி  pt web
தமிழ்நாடு

”வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்..” - உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி!

தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வரும் திங்கட்கிழமை, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் கோரியும் 4 பெண் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போரட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”காவல்துறையினுடைய அடக்குமுறையை கடந்து 116 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். பணி நிரந்தரம் கேட்டு 4 பெண்களின் உண்ணாநிலை போராட்டம் 6ஆம் நாளை எட்டியுள்ளது. ஆனால், அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் ஈடுபடவில்லை.

உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி

தூய்மை பணியாளர்களில் ஒப்பந்தத்தில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஊழலில் ஈடுபட்டு வருகிறார். ஆணையர் குமரகுருபரன் வந்த பிறகு தான் தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்பட்டது. IAS படித்ததே ஏஜேன்டாக மாறுவதற்காக தான் என்ற வகையில் குமரகுருபரன் செயல்பாடுகள் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கூறினால் சாப்பாடு தருகிறேன் என கூறுகிறார்கள். யார் அரசிடம் சாப்பாடு கேட்டது?

தூய்மை பணியாளர்களுக்கு நான்கரை ஆண்டுகள் கழித்து ஓய்வு அறை, கழிப்பறை கட்டித்தரப்படும் என்று கூறுகிறார்கள் இத்தனை ஆண்டுகள் என்ன செய்தார்கள்? என்ற கேள்விகளை எழுப்பிய அவர், தேர்தல் காலத்தில் ஆட்சியாளர்கள் அவர்கள் சாதனையை பேசட்டும், நாங்கள் வீதி தோறும் அவர்கள் செய்யும் அநீதிகளை பேசுவோம். மேலும், வரும் திங்கட்கிழமை தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாக்காளர் அடையாள அட்டை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என தெரிவித்தார்.