போராட்டக்குழுவினர்
போராட்டக்குழுவினர்pt web

“100% போராட்டம் தொடரும்; முடிந்தால் அப்புறப்படுத்துங்கள்” - உறுதியுடன் தூய்மைப் பணியாளர்கள்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அரசு நடத்திய 8ஆவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிலைநாட்ட காவல் துறையினர் முயன்று வரும் நிலையில், போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணியை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 5 மற்றும் 6ஆவது மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரிப்பன் மாளிகை முன்பு, இரவு பகலாக, வெயில் மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து 13ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் அவர்களுடனான அரசின் பேச்சுவார்த்தையும் தொடர்கிறது.

தூய்மைப்பணியாளர்களை கலைந்து செல்ல காவல் துறை உத்தரவு
தூய்மைப்பணியாளர்களை கலைந்து செல்ல காவல் துறை உத்தரவு

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தூய்மை பணியாளர்களுடன் அரசு தரப்பில் 8ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதுதொடர்பாக பேசிய போராட்டக் குழுவினர், அரசுத் தரப்பு உறுதியான முடிவை அறிவிக்காததால், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

போராட்டக்குழுவினர்
’குப்பைகளை போல தூக்கி எறிகிறது அரசு..’ நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட பரபர வாதங்கள்!

இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை சுட்டிக்காட்டி காவல் துறையினர் அறிவுறுத்தல்களை வழங்கினர். போராட்டத்தை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர், கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் ரிப்பன் மாளிகை பகுதியை காவல் துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் இருவழிப் பாதையில் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள்: பணியாளர்கள்
முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள்: பணியாளர்கள்

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், “13 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இன்று காலை கூட தமிழ்நாடு முதலமைச்சரிடம், ‘தமிழ்நாடு அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடக்கூடாது’ என்றுதான் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனாலும் கூட பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்கள் கோரிக்கை பற்றி ஒருவார்த்தை கூட பேச மறுத்தார்கள். இங்கிருந்து எப்படி கலைந்து செல்வது என்பது குறித்துதான் பேசினாரகள். பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் என்று கூறுவதெல்லாம் பொய். அவர்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசவேயில்லை” எனத் தெரிவித்தார். போராட்டம் தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாரதி, போராட்டம் 100% தொடரும் எனத் தெரிவித்தார். முதலமைச்சர் தலைமையில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.. எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் அடுத்தப் பேச்சுவார்த்தை என்று தெரிவித்த அவர், அவர்களால் முடிந்தால் அப்புறப்படுத்தச் சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.

போராட்டக்குழுவினர்
’போக்குவரத்துக்கு இடையூறு செய்றாங்க..’ தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com