அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் - கேள்விக்குறியான மாணவர்களின் பாதுகாப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் பெய்த கன மழையால் அம்மாபட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் முழுமையாக தேங்கியுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், மணமேல்குடி, மீமிசல் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் அம்மாபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் மழைநீர் முழுமையாக சூழ்ந்து காணப்படுகிறது.

அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்

ஏற்கெனவே மழையின் காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சூழலில் அந்தப் பள்ளி வளாகம் முழுவதும் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதும் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இன்று பள்ளிகளை திறப்பதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரையாண்டுத் தேர்வு நடப்பதால் மாணவர்கள் நலம் கருதி மாற்று இடத்தில் பள்ளியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விடுமுறை அறிவிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்

கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்யாமல் இன்று பள்ளிகள் திறக்கப்படுவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.