பத்ரிநாத், மோடி, ஸ்டாலின்
பத்ரிநாத், மோடி, ஸ்டாலின் ட்விட்டர்
தமிழ்நாடு

பிரபல கண் மருத்துவர் பத்ரிநாத் மறைவு: பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Prakash J

சென்னையில் புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா மருத்துவமனையை நிறுவியவரான மருத்துவர் பத்ரிநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு தரமான கண் சிகிச்சையை வழங்கியதற்காக பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளையும் பத்ரிநாத் வென்றுள்ளார். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ‘தொலைநோக்குப் பார்வையாளரும், கண் மருத்துவத்தில் நிபுணருமான, சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் ஜியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கண் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சமூகத்திற்கான அவரது இடைவிடாத சேவையும் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவின் தோல்விக்கு அகமதாபாத் மைதானமும் காரணமா? - பிட்ச் முதலில் மிகவும் மந்தமாக இருந்தது எப்படி?

மருத்துவர் பத்ரிநாத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், ’ஏழை மக்களுக்கும் தரமான மருத்துவசேவை கிடைக்க பாடுபட்டவர் பத்ரிநாத்’ என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ’தனது சொத்துகளை ஏழைகளுக்கான மருத்துவச் சேவைகளுக்காக சங்கர நேத்ரலயாவிற்கு அர்ப்பணித்தவர்’ என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

’எண்ணற்ற மக்களுக்கு கண் பார்வை பெற காரணமாக இருந்த பத்ரிநாத்தின் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு’ என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ”2 ஓவர்களில் ஆட்டத்தையே மாத்திடுவாங்க”-ஆஸி. குறித்து இந்திய அணிக்கு முன்பே எச்சரித்த பாக். வீரர்கள்!