இந்தியாவின் தோல்விக்கு அகமதாபாத் மைதானமும் காரணமா? - பிட்ச் முதலில் மிகவும் மந்தமாக இருந்தது எப்படி?

உலகக்கோப்பையில், இந்தியாவின் தோல்விக்கு அகமதாபாத் மைதானமும் ஒரு காரணமாகப் பேசப்படுகிறது.
அகமதாபாத் மைதானம்
அகமதாபாத் மைதானம்ட்விட்டர்

உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விதான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது. இதற்குப் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்தியாவின் தோல்விக்கு மைதானமும் ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. அகமதாபாத் மைதானம், இந்திய அணிக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது எனத் தெரிந்தும், இங்கே ஆட்டத்தை நடத்தியது ஏன் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களை எல்லாம் புறம்தள்ளி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியைத் திட்டமிட்டு நடத்தியது ஏனோ எனக் கேள்வி எழுந்துள்ளது.

அகமதாபாத் ஆடுகளம் ஐபிஎல் போட்டியின்போது 190 ரன்கள் சராசரியாக அடிக்கப்பட்டது. இதனால் 280-350 ரன்கள் அடிக்கும் நோக்கில்தான் இந்திய அணி வீரர்கள் களத்திற்கு வந்தார்கள். ஆனால் ஆடுகளம் தோய்வாக மாறுவதை உணர்ந்த இந்திய வீரர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக விராட் கோலி இரண்டு முறை ஆடுகளத்தைப் பார்த்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் ஆட்டம் இழந்தவுடன் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டிற்கு வராததை நினைத்து பிட்சைப் பார்த்து ஐந்து வினாடிகள் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்க: ”2 ஓவர்களில் ஆட்டத்தையே மாத்திடுவாங்க”-ஆஸி. குறித்து இந்திய அணிக்கு முன்பே எச்சரித்த பாக். வீரர்கள்!

மேலும், இறுதிப்போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தில் பல பிட்ச்கள் இருக்கும் நிலையில், இதுவரை பயன்படுத்தப்படாத பிட்ச்சை தேர்வுசெய்து, அதில் போட்டி நடத்த வேண்டும் என ஐசிசி ஆலோசனை கூறியதாகவும், ஆனால் பிசிசிஐ, இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த பிட்ச்சில்தான் இறுதிப்போட்டி நடக்க வேண்டும் என முடிவு செய்து அதை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. முன்னதாக, அரையிறுதிப் போட்டியின்போது, நியூசிலாந்து ஊடகங்கள் இதே கருத்தை வைத்திருந்தன. அப்படி தேர்வு செய்யப்பட்ட பிட்ச்சில், இந்திய வீரர்களால் முதல் இன்னிங்க்ஸில் ரன் குவிக்கவே முடியவில்லை. அதிலும் ரோகித் சர்மா வெளியேற்றத்துக்குப் பின் வந்த வீரர்களால் பவுண்டரி அடிக்கவே முடியாத நிலைகூட இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் அப்படியே ஆஸ்திரேலிய பக்கம் திரும்பியது.

இதனால்தான் மைதானம் தேர்வு குறித்து தற்போது அதிக விமர்சனம் கிளம்பியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணி, பிட்ச்சுக்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்வதில் தீவிரம் காட்டியதுடன், இந்தியாவையும் வீழ்த்தி வெற்றிபெற்றது. ஒருவேளை, அதே மைதானத்தில், இதுவரை போட்டி நடைபெறாத புதிய பிட்ச்சில் இந்தியா ஆடி இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: கோலியின் 48-வது சதம் சாத்தியமானது எப்படி.. இந்திய தோல்விக்கு நடுவரைக் காரணம் கூறுவது நியாயமா?

முன்னதாக, இறுதிப்போட்டியின்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், கேப்டன் ரோகித் சர்மாவும் பிட்சை நன்கு ஆராய்ந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. அப்போது பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பிட்சில் புற்கள் இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார்.

அதேநேரத்தில் பிட்ச் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், “நான் பிட்சை சரியாகக் கணிக்கக்கூடியவன் இல்லை. ஆனால் கொஞ்சம் உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது. எனினும், நல்ல பிட்ச் ஆகத்தான் இருக்கும் என்று தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர், “இரு அணிகளுக்கும் ஒரே பிட்ச்தானே. ஆம், நம் நாட்டில் நம்முடைய, நமக்குப் பழக்கமான பிட்சில் ஆடுவது சாதகங்கள் நிறைந்ததே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எதற்கும் தயாராகவே இருக்கிறோம். எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ரோகித், கோலி, ஷமி... கோப்பையைப் பறிகொடுத்தாலும் சாதனையில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்!

எனினும், நல்ல பிட்ச் ஆகத்தான் இருக்கும் என்று தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர், “இரு அணிகளுக்கும் ஒரே பிட்ச்தானே. ஆம், நம் நாட்டில் நம்முடைய, நமக்குப் பழக்கமான பிட்சில் ஆடுவது சாதகங்கள் நிறைந்ததே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எதற்கும் தயாராகவே இருக்கிறோம். எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு முன்பு பிட்சைப் பார்வையிட்ட பேட் கம்மின்ஸ், அதைப் புகைப்படம் எடுத்தார். இந்திய ரசிகர்களோ, அந்தப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து, ‘பிட்ச் மாற்றப்படும் என்பதற்காக கம்மின்ஸ் புகைப்படம் எடுத்துள்ளார்’ எனப் பதிவிட்டிருந்தனர். ஆனால், உண்மையில் அவர் பிட்ச் மாற்றப்படும் என்பதற்காக அதைப் புகைப்படம் எடுக்கவில்லை. பிட்சின் எந்த லைன் மற்றும் லெந்தில் பந்துவீச வேண்டும், பவுலர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவே புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க: உலகக்கோப்பை 2023: வெற்றி கைநழுவிப் போனது எப்படி..? இந்தியா தோற்றதற்கு மிக முக்கிய 5 காரணங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com