ஆரஞ்ச் அலர்ட்
ஆரஞ்ச் அலர்ட் @Indiametdept - ட்விட்டர்
தமிழ்நாடு

இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

PT WEB

செய்தியாளர் வேதவள்ளி

------

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரம் மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதுக்குமான மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு - “தெற்கு இலங்கையில் இருந்து தென் மேற்கு வங்கக்கடல் வரையிலும், தெற்கு ஆந்திராவை ஒட்டியும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன்காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்படுகிறது”

சென்னை வானிலை ஆய்வு மையம்:

“சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் ஒரு சில நேரங்களில் அதுவே கனமழையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் மழையின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் 24 மணி நேரத்தில் 12 செமீ முதல் 20 செமீ வரை மழையின் அளவு இருக்குமென கணிக்கப்பட்டால், அப்பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்படும். அதுவே 21 செமீ தாண்டினால் ரெட் அலர்ட் விடப்படும்.