ஆன்லைன் சூதாட்ட பாதிப்பு: வைரலாகும் பெண் காவலர் பாடிய விழிப்புணர்வு பாடல்... #Video

ஆன்லைன் சூதாட்டத்தின் பாதிப்புகள் குறித்து, பெண் காவலர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
women police
women policept desk

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கொரோனா பாதிப்புகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் மீறல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

online gambling
online gamblingfile

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தின் விளைவுகள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் காவலர் சசிகலா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். திரைப்பட பின்னணி பாடகர் திருமூர்த்தி பிளாஸ்டிக் குடத்தில் தாளம் போட விழிப்புணர்வு வாசகங்களுடன் பெண் காவலர் சசிகலா பாடிய அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த பாடலின் வீடியோவை, கீழே காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com