கைதான மயில்வாகனன்
கைதான மயில்வாகனன் புதியதலைமுறை
தமிழ்நாடு

“Car கொடுங்க சார்.. நான் பார்க் பண்றேன்” - நைசாக பேசி திருட்டு... ஊழியரை விரட்டிப்பிடித்த போலீஸ்!

யுவபுருஷ்

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் மயில்வாகனன் (33). சில தினங்களுக்கு முன்பாக மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் உள்ள MP லாட்ஜ் என்ற தங்குவிடுதிக்கு சென்று அதன் உரிமையாளரை சந்தித்த இவர், தான் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் இருப்பதால் லாட்ஜில் வேலை போட்டுத்தரும்படி கேட்டுள்ளார்.

இதனை நம்பி உரிமையாளரும் வேலை கொடுத்துள்ளார். அப்போது பணியில் சேருவதற்கான அடையாள அட்டைகள் கேட்டபோது, ‘தொலைந்துவிட்டது, விரைவில் தருகிறேன்’ என்று சாக்கு கூறியுள்ளார் மயில்வாகனன். இதனை தொடர்ந்து தற்காலிக உதவியாளராக அவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த விகாஷ்விஷ்ணு (29) என்பவர் மதுரை சென்றுள்ளார். அங்கு அவர் மேற்குறிப்பிட்ட அந்த லாட்ஜில் தங்கியுள்ளார். அங்கு தனது சொகுசு காரில் சென்று திருமண நிகழ்வுக்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை வழங்கிவிட்டு, மீண்டும் லாட்ஜிற்கு வந்துள்ளார். அப்போது லாட்ஜின் வெளியே காரை நிறுத்த முடியாமல் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மயில்வாகனன், “கார் சாவியை கொடுங்கள். நான் காரை நிறுத்திவிட்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.

இதனையடுத்து, மயில்வாகனனிடம் சாவியை கொடுத்துவிட்டு அறைக்கு சென்ற விஷ்ணு, நீண்டநேரம் ஆகியும் மயில்வாகனன் கார் சாவியை கொண்டுவரவில்லை என ரிசப்சனில் கேட்டபோது வெளியில் வந்து பார்த்தபோது, மயில்வாகனன் காரை எடுத்துசென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த லாட்ஜ் நிர்வாகிகள் மற்றும் கார் உரிமையாளர் அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில், விரைந்துவந்த காவல்துறையினர் அந்த பகுதியில் கார் கடந்து சென்ற பகுதிகளில் விசாரணை நடத்தி காரில் துரத்தி சென்று மயில்வாகனனை மடக்கிபிடித்தனர்.

பின்னர் காரை கடத்திசென்ற மயில்வாகனனை காவல்துறையினர் கைது செய்தனர். துரிதமாக மீட்டு காரை மீட்ட காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.