TN Finance Minister presents the interim budget  web
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட்| MSME மற்றும் தொழில்துறைக்கு மிகப்பெரும் ஏமாற்றம்..! - தொழில் முனைவோர் சங்கம்

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் எம்எஸ்எம்இ மற்றும் தொழிலுறைக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும், உற்பத்தி செலவு உயர்வால் தொழில்முனைவோர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் MSMEக்கள் மற்றும் தொழில்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாததால் தொழில் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு இல்லாததால், மைக்ரோ மற்றும் சிறு தொழில்கள் கடன் சுமை, சந்தை இழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைமை தொடர்கிறது.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், MSMEக்கள் மற்றும் தொழில்துறைக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொழில்துறை வளர்ச்சி குறித்து அரசு தொடர்ந்து பேசினாலும், இந்த பட்ஜெட்டில் மைக்ரோ மற்றும் சிறு தொழில்களுக்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Finance Minister presents the interim budget

இந்திய தொழில் முனைவோர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேவையானவற்றை அறிவிக்கவில்லை என பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஏமாற்றம் அளிக்கிறது..

1. ஒதுக்கீடு மிகக் குறைவு

தொழில்துறைக்கு வெறும் ₹4,500 கோடி மற்றும் MSMEக்களுக்கு ₹1,950 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தேவையைப் பொருத்தவரை மிகவும் போதியமற்றது.

2. புதிய திட்டங்கள் இல்லை

MSMEக்கள் எதிர்கொள்ளும் கடன் சுமை, சந்தை இழப்பு, உற்பத்தி செலவு உயர்வு, வேலைவாய்ப்பு இழப்பு போன்ற பிரச்சனைகளை சமாளிக்க ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை.

3. வர்த்தக சங்கங்களின் பரிந்துரைகள் புறக்கணிப்பு

பல தொழில் சங்கங்கள் அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற எந்த ஒரு பரிந்துரையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

4. ஏற்றுமதி சந்தை வாய்ப்பை பயன்படுத்த திட்டமில்லை

அமெரிக்க டேரிஃப் குறைப்பு மற்றும் இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் போன்ற வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், ஏற்றுமதி சந்தைகளை உருவாக்கி தயாராகும் புதிய திட்டம் ஒன்றும் இல்லை.

2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

5. கடந்த 7 மாத அமெரிக்க உயர்ந்த டேரிஃப் தாக்கத்திற்கு நிவாரணம் இல்லை

கடந்த 7 மாதங்களாக அமெரிக்க உயர்ந்த டேரிஃப் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு ஏற்றுமதியாளர்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

6. MSMEs க்கு வேலைத் தக்கவைப்பு (Job Retention) திட்டம் இல்லை

உற்பத்தி நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை தக்கவைக்க உதவும் புதிய Job Retention Support Scheme ஒன்றும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

7. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கோடவுன் வசதி இல்லை

ஏற்றுமதி யூனிட்டுகளுக்கு தேவையான கோடவுன்/கிடங்கு வசதி உருவாக்க அரசு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை.

8. “Made in Tamil Nadu” மார்க்கெட்டிங் ஆதரவு இல்லை

“Made in Tamil Nadu” தயாரிப்புகளுக்கான மார்க்கெட்டிங் உதவி, சிறப்பு E-platform, B2C சந்தை இணைப்பு போன்றவை முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

9. SIPCOT மூலம் மூலப்பொருள் வழங்க ‘ரேஷன் கடை’ திட்டம் இல்லை

MSMEக்களுக்கு மூலப்பொருட்கள் ஒரே தரத்தில், ஒரே விலையில், தள்ளுபடி விலையில் கிடைக்க SIPCOT மூலம் ரேஷன் கடை போன்று வழங்கும் திட்டம் ஒன்றும் இல்லை.

10. Micro Unitsக்கு Interest Subvention / Credit Guarantee திட்டம் இல்லை

மைக்ரோ யூனிட்டுகளுக்கு வட்டி சலுகை (Interest Subvention) மற்றும் Credit Guarantee Scheme போன்ற முக்கிய நிதி ஆதரவு அறிவிப்புகள் எதுவும் இல்லை.

11. மின்சார நிலையான கட்டணம் குறைப்பு இல்லை

Micro Unitsக்கு EB Fixed Charges குறைப்பு, மாதாந்திர பில்லிங் போன்ற கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

12. Job Work மீது GST தாக்கத்திற்கு சலுகை இல்லை

மைக்ரோ யூனிட்டுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் Job Work மீது அதிக GST தாக்கத்திற்கு சப்ஸிடி/நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை..

இந்திய தொழில் முனைவோர் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளது. அந்த கோரிக்கையில் தமிழ்நாடு அரசு உடனடியாக,

✅ Micro Unitsக்கு வட்டி சலுகை + கடன் உத்தரவாத திட்டம்

✅ “Made in Tamil Nadu” E-platform மற்றும் மார்க்கெட்டிங் உதவி

✅ Export Unitsக்கு Godown / Warehouse வசதி

✅ EB Fixed Charges குறைப்பு + Monthly Billing

✅ Job Work GST தாக்கத்திற்கு Subsidy

✅ SIPCOT மூலப்பொருள் ரேஷன் திட்டம்

✅ Export Market Development Scheme

✅ Job Retention Scheme

முதலியவற்றை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.