செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை பாரதி நகர் தனியார் விடுதியில் தங்கி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது...
இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது:
காஷ்மீர் எல்லையோரத்தில் நடந்த பயங்கர தாக்குதலை எதிர்த்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதை வரவேற்க்கும் வகையில் தமிழக முதல்வர் பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பங்கேற்பார்கள். மேலும் பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் தாக்குதலுக்கு எதிராக பயங்கரவாத முகாம்கள் மீது பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஒரே கூட்டணிதான உள்ளது:
இந்தியர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பயங்கரவாத ஒழிப்புக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பேரணி அமைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று வரை ஒர் அணிதான் உள்ளது; அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிதான், அணி என்ற வடிவத்தில் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஓர் அணியாகவே வடிவம்பெறவில்லை.
மும்மொழிக் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விசிக வரவேற்கிறது:
காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டாலும் அது உறுதி பெறவில்லை. மேலும் எந்தெந்த கட்சிகள் இடம்பெற போகிறது என்றும் தெரியவில்லை. எனவே திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களின் பேராதரவு வழக்கம்போல் கிடைப்பதோடு மகத்தான வெற்றியும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றுதான் தமிழக முதல்வர் திராவிட மாடல் அரசு 2.0 என்று கருத்து தெரிவித்துள்ளார். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை குறித்தான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் நம்பகத் தன்மையை காட்டுவதோடு இதனை விசிக வரவேற்கிறது.
மதத்தின் பெயரால் எந்த வெறுப்பு அரசியலும் கூடாது:
இஸ்லாமியர்கள்ளும்இந்தியர்கள்தான், இந்த மண்ணின் மைந்தர்கள்தான். அவர்களுக்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு பரப்புவது ஏற்படுவது அல்ல. இஸ்லாமியர்களும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ஒன்றிய அரசின் தாக்குதலை வரவேற்கிறார்கள். ஆகவே, இந்தியாவை பொறுத்தவரையில் மதத்தின் பெயரால் எந்த வெறுப்பு அரசியலும் கூடாது. சமூக பலவீனவாதம் பிளவினை வாதமும் கூடாது என்பதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். ஆப்ரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கை என்கிற முறையில் ஒட்டுமொத்த இந்தியர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், அது இந்துத்துவாவின் அஜந்தா என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்துகிறார்கள்.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள்:
போர் வேண்டாம் என்பதுதான் ஜனநாயக சக்திகளின் கோரிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது வேறு. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் என்பது வேறு. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக மாற்றுவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். வதந்திகளை பரப்புகிறார்கள். சமூக வலைதளங்களை மாற்றுகிறார்கள், அது ஏற்புடையதல்ல. பயங்கரவாத சக்திகள் கூடாரங்கள் எதுவாக இருந்தாலும் அவர்களின் பதுங்கு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அவர்களை பலவீனப்படுத்தும் அதன் அடிப்படையில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது என்பது வரவேற்க காத்திருந்தது” என்று தெரிவித்தார்.