Heavy rain  web
தமிழ்நாடு

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மே 17 வரை கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Prakash J

15ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை, தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை எச்சரிக்கை

அந்த வகையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் 14, 15ஆம் தேதிகளில் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கனமழை

அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 4 நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.