IMD Warns of Heavy Rain in Tamil Nadu from April 30
கனமழை எச்சரிக்கைpt web

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஏப்ரல் 30-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Published on

கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 30-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை
கனமழைPt web

அதன்படி, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 30-ம் தேதி கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மே 1-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், மே 2-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com