தங்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நேற்று உயர்வு.. இன்று குறைவு.. கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை மாற்றங்கள்!

எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று சவரனுக்கு 4,800 ரூபாய் குறைந்துள்ளது.

Prakash J

வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, 4 லட்சத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று சுமார் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.

எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று சவரனுக்கு 4,800 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 29ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து 16,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11,600 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை பயணித்த பாதையை பார்க்கலாம். சென்னையில் கடந்த 24ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயாக இருந்தது. 25ஆம் தேதி ஞாயிற்றக்கிழமை என்பதால் அதே விலையே நீடித்தது. 26ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து200 என்ற உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை தொடர்ந்து உயர காரணங்கள் என்ன

அடுத்து 27ஆம் தேதி சற்றே குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. 28ஆம் தேதி தங்கம் விலை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 880 என்ற மேலும் ஓர் உச்சத்தை தொட்டது. 29ஆம் தேதி இது ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற அடுத்த உச்சத்தைத் தொட்டது. 30ஆம் தேதி தங்கம் விலை 4,800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, 4 லட்சத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று சுமார் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி

சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.