தேனீக்கள் - மாணவன்
தேனீக்கள் - மாணவன் freepik
தமிழ்நாடு

கோவை : தேன் கூட்டை கலைக்க மாணவனிடம் தீப்பந்தத்தைக் கொடுத்த தலைமை ஆசிரியர்; இறுதியில் நேர்ந்த சோகம்!

PT WEB

கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள ஆலாந்துறை அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் அருகே தேன் பூச்சிக் கூடு கட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் தொந்தரவு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கடவுள் வாழ்த்து ரத்து செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசு நடுநிலைப் பள்ளி

அப்போது தலைமை ஆசிரியர், அந்த தேன் கூட்டினை அப்புறப்படுத்த நினைத்து அதே பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவன் சந்துரு உள்ளிட்ட 4 மாணவர்களை அழைத்து தேன் கூட்டினை கலைக்குமாறு கூறியுள்ளார். இதற்காக பள்ளியில் இருந்த கிருமி நாசினி (sanitizer) கேன் மற்றும் தீப்பந்தத்தை தலைமையாசிரியர் அந்த மாணவர்களிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மாணவர்கள் தீப்பந்தத்தில், சானிடைசரை ஊற்றிய போது, சானிடைசர் துளிகள் மாணவன் சந்துரு மீது பட்டதால், எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை நடந்த வந்த போது

அரசுப்பள்ளியில் இது போன்ற வேலைகளைச் செய்ய பணியாட்கள் இருந்தும் பள்ளி மாணவனைத் தலைமையாசிரியர் அனுப்பி வைத்தது சர்ச்சையையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.

தேன் கூட்டை அழிக்கச் சென்ற மாணவன் மீது தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.