மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி file image

மிக்ஜாம் புயல் எதிரொலி - 2 நாட்களாகத் தண்ணீரில் மிதக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்!

மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளே புகுந்த மழை நீர், 2 நாட்களைக் கடந்தும் வடியாததால் தொல்லியல்துறை ஊழியர்கள் தாங்களே மழை நீரை அகற்றி வருகின்றனர்.
Published on

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் எதிரொலியால் கடந்த இரண்டு நாட்களாகக் வட கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாமல்லபுரம் கடற்கரை கோவில்
மாமல்லபுரம் கடற்கரை கோவில்

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இரண்டு நாட்களைக் கடந்தும் இதுவரை மழை நீர் வடியாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர் கான்! விஷ்ணு விஷால் போட்ட ட்விட்; விரைந்து செயல்பட்ட மீட்பு படை!

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திலும் மிக்ஜாம் புயல் எதிரொலியால் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் கோவில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இடுப்பளவு வரை மழை நீர் தேங்கிக்காணப்பட்டது. கடற்கரை கோயிலை சுற்றி உள்ள அகழியில் 5 அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் வெள்ளத்தால் கோயிலின் சிற்பங்கள் சேதம் அடையும் என்பதால் கோயில் முன்புறம் அகழி நீர் கடற்கரை கோயிலுக்குள் புகாதபடி தொல்லியல் துறை பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கிப் பாதுகாத்து வருகின்றனர். மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

மழை நீரை மணல் முட்டைகளை வைத்து அடைக்கும் ஊழியர்கள்
மழை நீரை மணல் முட்டைகளை வைத்து அடைக்கும் ஊழியர்கள்

இந்த கனமழை எதிரொலியால் மாமல்லபுரம் கடற்கரை  கோவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
சிங்கம்புணரி: காவலுக்காக வயலுக்குச் சென்ற இளைஞர்.. விஷப்பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி பலி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com