கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வரப்போவதாக பேசுபவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பாஜக மாவட்ட மூத்த தலைவர் தயா சங்கர், மாவட்டபொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் மற்றும் பாஜக, அதிமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.
அப்போது, அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எப்போதும் மக்கள் பணி செய்யும் இயக்கமாக திமுக திகழ்வதாக தெரிவித்தார்.