ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் Pt web
தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலத்தின் முழுநேர ஆளுநர் அர்லேகர்.. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

தமிழ்நாடு மாநிலத்தின் முழுநேர ஆளுராக அர்லேகரை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Rishan Vengai

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். பல மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர், கர்நாடக ஆளுநராக சுதா யாதவ் உள்ளிட்டோர் பொறுப்பேற்கின்றனர்.

தமிழ்நாடு மாநிலத்தின் முழுநேர ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாநிலத்தையும் கவனித்துவந்த நிலையில், தற்போது முழுநேர பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விஜய் - அர்லேகர்

அதேபோல சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்துர், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்பியான பிரஜ் மோகன் ராம் ஒடிஷா மாநில ஆளுநராகவும், முன்னாள் எம்பி சுதா யாதவ் கர்நாடக மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்பி தால் சிங் பிசென் உத்தராகண்ட் மாநில ஆளுநராகவும், துஷ்யந்த் கவுதம் என்ற முன்னாள் எம்பி சிக்கிம் ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.