அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா வழக்கு.. ராஜிநாமா செல்லுமா? இன்று தீர்ப்பு!
அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமா செல்லுமா என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முடிவு, தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில், தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில், சபாநாயகர் ராஜிநாமாவை ஏற்றது செல்லாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகுமா அல்லது தகுதிநீக்க விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுமா என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெரியவரும்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் முடிவு, சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி தொடர்பான முக்கிய சட்டத் தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது.

