\
முக ஸ்டாலின் - மாணிக்கம் தாகூர்
முக ஸ்டாலின் - மாணிக்கம் தாகூர்pti

"திமுக தோல்விக்கு எஸ்ஐஆர் காரணம் அல்ல.." மாணிக்கம் தாகூர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு!

திமுக தோல்விக்கு எஸ்ஐஆர் காரணமல்ல என்று மாணிக்கம் தாகூர் குற்றச்சட்டை முன்வைத்துள்ளார்.
Published on: 
Summary

திமுக தோல்விக்கு எஸ்ஐஆர் காரணமல்ல என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் பெண்களைப் பற்றிய தவறான பேச்சுகளே தோல்விக்குக் காரணம் என அவர் விமர்சித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர் அல்ல, கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதமும், பெண்களைப் பற்றிய தவறான பேச்சும்தான் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு நடந்த பிரசாரக் கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளை திமுகவினர் சிறப்பாக மேற்கொண்டு தகுதியான வாக்காளர்களை நீக்கவிடாமல் பார்த்துக் கொண்டதாக கூறிவிட்டு, தோல்வியை தழுவியதும் எஸ்.ஐ.ஆர் மீது பழிபோடலாமா எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையிலேயே எஸ். ஐ.ஆரை திமுக எதிர்க்கிறது என்றால், டெல்லி போராட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டுமே தவிர, பாஜகவுக்கு அஞ்சி போராட்டத்தை புறக்கணித்திருக்கக் கூடாது என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

முக ஸ்டாலின் - மாணிக்கம் தாகூர்
யாரும் செய்யாததை செய்த விஜய்.. 'ராகுல் - விஜய் - மோடி' சந்திப்பில் நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com