2025-2026 கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை, 12 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெறும். முடிவுகள் மே 20 மற்றும் மே 8 அன்று வெளியாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் இன்று (நவம்பர் 4), அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்வளிக்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்புக்க்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், 10 வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் மே 20 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுகள்:
12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9 ஆம் தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
2025- 26ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 8.07 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் 8.70 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர். அடுத்த வருடம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்கவுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு 2017 -2018ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.