CSK - MI
CSK - MI cricinfo
T20

3 Sixes In A Row.. 4 பந்தில் ஆட்டத்தை மாற்றிய தோனி! MI-ஐ மிரட்டிய ருதுராஜ்-துபே! 207 ரன் இலக்கு!

Rishan Vengai

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது என்றாலே, களத்திலும் களத்தை தாண்டி வெளியிலும் அனல்பறக்கும். 5 கோப்பைகளை சரிசமமாக வென்றிருக்கும் இவ்விரு அணிகளும், களத்தில் ஒரு ஹை-பிரஸ்ஸர் போட்டியை விருந்தாக கொடுக்கக்கூடியவை.

csk vs mi

ரசிகர்கள் அதிகமாக எதிர்ப்பார்த்த ஐபிஎல் ரைவல்ரி போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடியில் மிரட்டிய ருதுராஜ்-துபே!

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், மும்பையை சேர்ந்தவரான அஜிங்கியா ரஹானே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். பவர்பிளேவில் அதிக ரன்களை எதிர்ப்பார்த்து சிஎஸ்கே நகர்த்திய நகர்த்தலை, ரஹானேவை 5 ரன்னில் வெளியேற்றிய கோட்ஸீ கலக்கிப்போட்டார். 8 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த போதும், அதற்கு பிறகு கைக்கோர்த்த ரச்சின் மற்றும் கேப்டன் ருதுராஜ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர்.

dube - ruturaj

2 பவுண்டரிகள் 1 சிக்சர் என ரச்சின் விளாச, சிறந்த டச்சில் தெரிந்த ருதுராஜ் கெய்க்வாட் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். முக்கியமான தருணத்தில் ரச்சினை ஸ்ரேயாஸ் கோபால் வெளியேற்ற, அதற்குபிறகு ரன்களை எடுத்துவரும் பொறுப்பை கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் எடுத்துக்கொண்டனர்.

ruturaj

போட்டிப்போட்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி, அடுத்தடுத்து அரைசதங்களை எடுத்துவந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டிவிட்டது. 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 69 ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 15 ஓவர்களுக்கு 150 ரன்களை எடுத்திருந்த போது கெய்க்வாட் வெளியேற 220 ரன்களை எடுத்துவரும் என்ற நல்ல நிலையிலேயே இருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் தேவையில்லாமல் கடைசி 5 ஓவருக்கு மிட்செல் மார்ஸை பேட்டிங்கிற்கு அனுப்பிய சிஎஸ்கே அணி கோட்டைவிட்டது. 14 பந்துகளுக்கு வெறும் 17 ரன்களை மட்டுமே அடித்த மிட்செல் ரன்வேகத்தை தடுத்துநிறுத்தினார்.

கடைசி 4 பந்தில் ஆட்டத்தை திருப்பிய தோனி..

என்னதான் மிட்செல் மார்ஸ் சொதப்பினாலும், மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஷிவம் துபேb 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருகட்டத்தில் 220 ரன்கள் வரும் என்றிருந்த நிலையில், 200 ரன்களாவது வருமா என்ற நிலைக்கு மும்பை அணி சிஎஸ்கேவை தள்ளியது.

dube

ஆனால் கடைசி 4 பந்துகளுக்கு களத்திற்கு வந்த மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா வீசிய 3 பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டு ஹாட்ரிக் சிக்சர்களுடன் ரசிகர்களை குதூகலத்திற்கே தள்ளினார். 4 பந்துகளுக்கு 20 ரன்களை எடுத்துவந்த தோனி, சிஎஸ்கே அணியை 206 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

dhoni

207 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிவருகிறது. நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் மும்பை அணிக்கு எதிராக 20 ரன்கள் குறைவான டோட்டல் என கூறப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.2

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்கவிட்டனர். 7 ஓவர்களில் மும்பை அணி 70 ரன்களை குவித்து சிஎஸ்கேவை மிரட்டியது. அந்த நேரத்தில் ஆட்டத்தின் 8 ஆவது ஓவரை வீச வந்தார் பதிரானா. முதல் பந்திலேயே இஷான் கிஷனை 23 ரன்னில் வெளியேறினார். மூன்றாவது பந்தில் மும்பை அணியில் அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவை டக் அவுட் ஆகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும், ரோகித் சர்மாவின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே திணறியது. அவருக்கு திலக் வர்மாவும் ஒத்துழைப்பு கொடுத்தார். 12 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 43 பந்துகளில் 74 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். திலக் வர்மாவும் 12 பந்துகளில் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். அடுத்து ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பலர் பேட்டிங் செய்ய காத்திருக்கின்றனர். 8 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.