அர்ஜென்டினா அணிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். உலகம் இதுவரை கண்டிராத கால்பந்து ஜாம்பவானுக்கு மரியாதை கொடுக்க விரும்பிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம் பெனின் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் ஒரு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது. இந்திய நேரப்படி நேற்று (அக்டோபர் 7) அதிகாலை, நடைபெற்ற அந்தப் போட்டியில், 1 கோல் அடித்த மெஸ்ஸி அடித்ததுடன், இரண்டு அசிஸ்டுகளையும் செய்திருந்தார்.
தொடர்ந்து இறுதி விசில் ஊதப்பட்ட நிலையில், மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்தது. மைதானத்தில் இருந்த 80 ஆயிரம் ரசிகர்கள், கண்ணீர் மல்க மெஸ்ஸிக்கு பிரியாவிடை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடைபெறுவது குறித்து ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். இந்தச்சூழலில் தான், மெஸ்ஸியின் நீண்ட கால போட்டியாளராக கருதப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, அவரின் பதிவுக்கு பதிலளித்து கமெண்ட் செய்திருப்பது வைராகி வருகிறது.
மெஸ்ஸியின் பதிவுக்கு பதிலளித்த ரொனால்டோ, மெஸ்ஸி, பல ஆண்டுகளாக தனது நாட்டுக்காக விளையாடி வரலாற்றில் நீங்காத இடத்தை உருவாக்கியுள்ளீர்கள். அர்ஜென்டினாவுக்காக நீங்கள் சாதித்த அனைத்திற்கும் மிகுந்த மரியாதை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அவரின் கமெண்டுக்கு மட்டும் 55 லட்சத்துக்கும் அதிகான லைக்குகள் தற்போது வரை குவிந்திருக்கின்றன.