\
Football legend Messi has retired
Messi Reuters

முடிவுக்கு வந்த சகாப்தம்.. Final-லிலும் மாஸ் ஆட்டம்.. ஓய்வு பெற்றார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!

கால்பந்து விளையாட்டின் நாயகனான மெஸ்ஸி தனது கடைசி சர்வதேச கால்பந்து தொடரை வெற்றியோடு நிறைவு செய்துள்ளார்.
Published on: 

கால்பந்து உலகம் பிலே, மாரடோனா, ரிவால்டோ, பிளாட்டினி, டி ஸ்டிபானோ என்ற பல ஜாம்பாவான்களை கண்டுள்ளது. அந்த வகையில், 21-ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஜாம்பவான் வீரராக மெஸ்ஸி தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். சிறிய வயதில் வளர்ச்சி குறைபாடு காரணமாக மெஸ்ஸி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்குள் இருந்த கால்பந்து அரக்கனை கண்டுகொண்டு அவரை தங்களின் இளையோர் அகாடமியான ’லா மசியா’வுக்கு ஒப்பந்தம் செய்து அவரின் மருத்துவச் செலவுகளை உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றான பார்சிலோனா கிளப் ஏற்றுக்கொண்டது.

Reuters

தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டம் காரணமாக 17 வயதிலேயே அவருக்கு பார்சிலோனா சீனியர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது முதல் போட்டியிலே கோல் அடித்த மெஸ்ஸியின் கால்கள் அதன் பின்னர் செய்தது எல்லாம் மாயாஜாலம்தான். குறுகிய காலத்திலேயே பார்சிலோனா கிளப்பின் சூப்பர் ஸ்டாராக மெஸ்ஸி மாறிய நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடித்து அணிக்காக கோப்பையை வெல்பவராக உருவாகினார். அதன் உச்சமாக 2009-ஆம் ஆண்டு வெறும் 22 வயதில் கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பாலன் டி ஓர்' விருதை வென்று மெஸ்ஸி அசத்தினார்.

Football legend Messi has retired
Argentina ஜெர்சியில் கடைசி போட்டி.. நாளை விடைபெறுகிறார் 'மெஸ்ஸி'.. எப்போது, எங்கு LIVE பார்க்கலாம்?

தொடர்ந்து மெஸ்ஸி 2012-ஆம் ஆண்டு கிளப் மற்றும் தேசிய அணிக்காக 91 கோல்கள் அடித்தார். இதன்மூலம் ஓர் ஆண்டில் அதிகபட்ச கோல் அடித்த வீரர் என்னும் சாதனையை மெஸ்ஸி படைத்தார். இந்தச் சாதனையை இப்போது வரை யாரும் நெருங்கக்கூட முடியவில்லை.

மெஸ்ஸி பார்சிலோனா அணியில் ஆடிய காலத்தில் அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை மெஸ்ஸி படைத்தாலும், அவரின் தேசிய அணியான அர்ஜென்டினா அணிக்காக எந்தவொரு கோப்பையும் வென்று கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இளம் வயதில் அர்ஜென்டினா அணிக்காக அண்டர் -20 உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் தங்கம் ஆகியவற்றை வென்றாலும், சீனியர் அணிக்காக கோப்பையை வெல்ல முடியாத நிலை இருந்தது.

Reuters

இதனால் கடும் மன உளைச்சலில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு அர்ஜென்டினா ரசிகர்களை அசைக்க, அவர் ஓய்வு முடிவைத் திரும்பப் பெறவேண்டும் எனப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதனால் ரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அந்த முடிவை திரும்பப்பெற்றார்.

Football legend Messi has retired
‘இதுதான் உண்மையான கால்பந்து அதிசயம்..’ ஒரே அணியில் மெஸ்ஸி-ரொனால்டோ? 2026 டிசம்பரில் உறுதி?

அதன் பின்னர் நடந்தது எல்லாம் அவரின் கால்பந்து வாழ்க்கையில் உச்சமாக அமைந்தது. இரண்டு கோபா அமெரிக்கா கோப்பை, ஒரு அமெரிக்க - ஐரோப்பிய பைனலிசிமா (Finalissima) கோப்பை ஆகியவற்றை வென்று அசத்திய மெஸ்ஸி, 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தனது நீண்டநாள் கனவான உலகக்கோப்பையை கையில் ஏந்தினார். தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பையில் தனது அணியை தனியாளாக இறுதிப்போட்டி வரை கொண்டுசென்ற மெஸ்ஸி ஸ்பெயின் அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

Reuters

இந்தச் சூழலில் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்தார். உலகம் இதுவரை கண்டிராத கால்பந்து ஜாம்பவானுக்கு மரியாதை கொடுக்க விரும்பிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம் பெனின் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் ஒரு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கிய இந்தப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இரண்டு கோல்கள் அடிக்க அசிஸ்ட் வழங்கிய மெஸ்ஸி, 71-ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக இறுதி கோல் அடித்தார். தொடர்ந்து இறுதி விசில் ஊதப்பட்ட நிலையில், மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்துள்ளது. மைதானத்தில் இருந்த 80 ஆயிரம் ரசிகர்கள், கண்ணீர் மல்க தங்கள் நாயகனுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கால்பந்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள மெஸ்ஸி, யாராலும் படைக்க முடியாத சாதனையாகக் கருதப்படும் மெஸ்ஸி கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் 'பாலன் டி ஓர்' விருதை 7- முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Football legend Messi has retired
முடிவுக்கு வந்த ’மெஸ்ஸி’ சகாப்தம்.. 21 ஆண்டு கால்பந்து பயணத்துக்கு விடைகொடுத்தார் 'MESSI'.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com