விராட் கோலி web
கிரிக்கெட்

சோகத்தில் முடிந்த அடிலெய்டு கதை.. டக்அவுட்டான பிறகு கோலி செய்த செயல்! ஓய்வுக்கான அறிகுறியா..?

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானம் விராட் கோலியின் கோட்டை என சொல்லப்பட்ட நிலையில், 4 பந்தில் டக் அவுட்டான பிறகு எல்லோரையும் ஏமாற்றத்தில் தள்ளினார் கோலி..

Rishan Vengai

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானம் விராட் கோலியின் கோட்டை என சொல்லப்பட்ட நிலையில், 4 பந்தில் டக் அவுட்டான பிறகு எல்லோரையும் ஏமாற்றத்தில் தள்ளினார் கோலி..

பொதுவாக களத்தில் ஆக்ரோசமாக இருக்கும் வீரர்கள், பேட்டிங்கில் அதே ஆக்ரோசத்தையோ, ரன்களையோ குவிப்பதில் சொதப்பி விடுவார்கள். ஆனால் விராட் கோலியை பொறுத்தவரையில், களத்தில் எப்படி ஆக்ரோசமாக இருக்கிறாரோ அதே ஆக்ரோசத்தை தன்னுடைய பேட்டிங்கிலும் வெளிப்படுத்துவார். அதனால் தான் விராட் கோலியிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என ரிக்கி பாண்டிங் ஒருமுறை ஆஸ்திரேலியா அணிக்கு அறிவுரை வழங்கியிருந்தார்..

virat kohli

ஆஸ்திரேலியா மண்ணில் 10 சதங்களை அடித்திருக்கும் விராட் கோலி, அடிலெய்டு மைதானத்தில் மட்டும் 5 சதங்களை விளாசியுள்ளார்.. இதனால் அடிலெய்டு மைதானம் விராட் கோலியின் கோட்டை என சொல்லப்படுகிறது. இதில் 2 ஒருநாள் சதங்களும், 3 டெஸ்ட் சதங்களும் அடங்கும்..

இந்த சூழலில் 7 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் களம்கண்ட விராட் கோலி, அடிலெய்டு மைதானத்தில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது..

சோகத்தில் முடிந்த அடிலெய்டு கதை..

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விராட் கோலி அனைத்து வடிவத்திலும் 12 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் உட்பட 975 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய பேட்டிங் சராசரி 65ஆகும், அதில் இரண்டு ஒருநாள் சதங்களும் அடங்கும். இது மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட அதிகமாகும்..

ஒருமுறை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் 90 ரன்கள் குவித்து நாட் அவுட்டில் இருந்த விராட் கோலியின் பேட்டிங்கை பாராட்டிய தோனி, அடிலெய்டில் அவர் குவிக்கும் ரன்களை பார்த்து அவருக்கு ஸ்டாண்ட் வைப்பார்கள் என்று புகழாரம் சூட்டினார்.. கோலியின் முதல் சர்வதேச டெஸ்ட் சதமும் அடிலெய்டு மைதானத்தில் தான் வந்தது..

இப்படி கோலிக்கும் அடிலெய்டு மைதானத்திற்கும் அதிகப்படியான பிணைப்பு இருந்துவரும் நிலையில், ‘அடிலெய்டு மைதானத்தில் கால்வைக்கும்போது இனம் புரியாத பிணைப்பு இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என அடிலெய்டு மைதானத்தில் கூடியிருந்த அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.. 4 பந்துகளை சந்தித்த கோலி LBW மூலம் 0 ரன்னில் வெளியேறினார்.

டக் அவுட்டில் வெளியேறிய போதும் அடிலெய்டு ரசிகர்கள் விராட் கோலிக்கு எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்.. அப்போது அடிலெய்டு ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தினார் கோலி.. அவருடைய இந்த செய்த செயல் ஓய்வை அறிவிப்பதற்கான அறிகுறியா என ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்..