இந்தியா தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்
இந்தியா தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்web

உலகக்கோப்பை | இந்தியா ஹாட்ரிக் தோல்வி.. என்ன காரணம்? சரி செய்யவேண்டியது என்ன?

2025 மகளிர் உலகக்கோப்பையின் லீக் போட்டிகளில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றுள்ள இந்தியா, அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பில் பின்தங்கியுள்ளது..
Published on
Summary

2025 மகளிர் உலகக்கோப்பையின் லீக் போட்டிகளில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றுள்ள இந்தியா, அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பில் பின்தங்கியுள்ளது..

ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லாத இந்திய மகளிர் அணி, சொந்தமண்ணில் நடைபெறும் 2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது..

ஆனால் நடப்பு மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் தோல்விகளை கண்டிருக்கும் இந்திய அணி, அரையிறுதியை உறுதிசெய்யும் இடத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையே போட்டியிட்டு வருகிறது.

2025 மகளிர் உலகக்கோப்பை
2025 மகளிர் உலகக்கோப்பைweb

5 போட்டியில் விளையாடி இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்தியா, தென்னாப்ரிக்காவிற்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்திலும் நெருக்கமான தோல்வியை பதிவுசெய்தது. இந்த 3 போட்டியிலும் கையிலிருந்த போட்டியை தாங்களாகவே எதிரணிக்கு கிஃப்டாக வழங்கியது இந்தியா..

இந்தசூழலில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமான முக்கியமான 3 காரணங்கள் குறித்து பார்க்கலாம்..

இந்தியா தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்
WC அரையிறுதி| கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் போட்டி.. யாருக்கு அதிக வாய்ப்பு?

பேட்டிங்கில் இருக்கும் பிரச்னை..

2025 மகளிர் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியிருக்கும் சூழலில், இதுவரை இந்திய அணியிலிருந்து ஒரு சதம் கூட அடிக்கப்படவில்லை. இந்தியாவின் தொடக்க வீரர்களான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தாலும், இருவரில் ஒருவர் கூட பெரிய ஸ்கோரை அடித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை..

ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, ரேனுகா சிங்
ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, ரேனுகா சிங்pt web

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் சரி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சரி ஸ்மிரிதி மந்தனாவின் விக்கெட் முக்கிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் இந்தியா வெற்றியை ருசித்திருக்கும். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தவறான நேரத்தில் ஸ்மிரிதி, தீப்தி சர்மா, ரிச்சா கோஸின் விக்கெட்டுகள் விழுந்தன..

ஹர்மன்ப்ரீத்
ஹர்மன்ப்ரீத்

ஆஸ்திரேலியா தரப்பில் 4 சதங்கள், இங்கிலாந்து தரப்பில் இரண்டு சதங்கள், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா ஒரு சதத்தை பதிவுசெய்துள்ளன. ஆனால் இந்தியாவில் இருந்து ஒரு சதம் கூட அடிக்கப்படவில்லை, அதேபோல போட்டியை முடித்துக்கொடுக்கும் ஃபினிசர் ரோலை யாரும் எடுக்காதது பெரிய பாதகமாக இருக்கிறது..

இந்தியா தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்
WC அரையிறுதி| கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் போட்டி.. யாருக்கு அதிக வாய்ப்பு?

பந்துவீச்சில் இருக்கும் பிரச்னை..

இந்திய அணி பந்துவீச்சில் இதுவரை ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை விட்டுக்கொடுத்துள்ளது. பந்துவீச்சில் 6வது பவுலர் இல்லாதது இந்தியாவிற்கு பாதகமாக அமைந்துள்ளது. பெரும்பாலான போட்டிகளில் 6வது பவுலராக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஹவுர் வீசிவருகிறார்.

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

அதுமட்டுமில்லாமல் பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்தும் பவுலர் இல்லாததும் இந்தியாவிற்கு பிரச்னையாக இருந்துவருகிறது. பாதி ஓவர்களில் இந்தியாவின் விக்கெட் வீழ்த்தும் திறன் குறைவாக இருக்கிறது. பேட்டர்களுக்கான திட்டம் இல்லாமல் பந்துவீசுவதை போல் உள்ளது.

ஸ்ரீ சரணி
ஸ்ரீ சரணி

போதாக்குறைக்கு ஒரு போட்டியில் விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள், அடுத்த போட்டியில் விக்கெட் இல்லாமல் செல்கின்றனர். பந்துவீச்சில் என்ன ஹோம் ஒர்க் செய்துவருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 81/5 விக்கெட்டுகளை வீழ்த்தியபிறகும் இந்தியா தோற்றது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது..

இந்தியா தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்
’3 சதம் அடித்தாலும் ரோகித் - கோலிக்கு இடமிருக்குமா..?’ - உலகக்கோப்பை தேர்வு குறித்து அகர்கர் ஓபன்!

ஃபீல்டிங்கில் இருக்கும் பிரச்னைகள்..

இந்தியாவை பொறுத்தவரையில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் ஒரு சுமாரான தொடரையே கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்டம்ப் அவுட்டை கோட்டைவிட்டது, ஆஸ்திரேலியாவை தடுத்த நிறுத்த முடியாத நிலைமைக்கு கொண்டுசென்றது. பல போட்டிகளில் அவருடைய கிளவ்ஸில் பந்து உட்காரவே இல்லை.. அதுமட்டுமில்லாமல் டிஆர்எஸ் வாய்ப்புகளை இழப்பதற்கும் ரிச்சா கோஸ் பெரிய காரணமாக இருக்கிறார்..

ஒரு பக்கம் விக்கெட் கீப்பர் என்றால், மறுபக்கம் கைக்கு வரும் கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் இந்திய வீராங்கனைகள் களத்தில் கோட்டைவிடுகின்றனர். வாய்ப்பு இல்லாத இடத்திலிருந்து கேட்ச் எடுப்பது ஒரு பக்கம் இருந்தால், கைக்கு வரும் கேட்ச்களை கூட இந்திய ஃபீல்டர்கள் டிராப் செய்து வருகின்றனர். இந்திய அணியின் ஃபீல்டிங் அவர்களுக்கு உண்மையில் பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது..

இந்தியா தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்
”காட்டுமிராண்டித்தனம்” | பாக். தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மரணம்.. ரசீத் கான் கண்டனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com