சூர்யவன்ஷி இந்திய யு19 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யு19 உலகக்கோப்பை ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி குரூப் ஏ-வில் உள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரானது வரும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 முதல் நடைபெறவிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்குபெற்று விளையாடவிருக்கும் நிலையில், இந்திய அணி குரூப் ஏ பட்டியலில் நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் அமெரிக்க அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இப்போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபாவில் நடைபெறவிருக்கின்றது.
இந்தசூழலில் யு19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஆயுஸ் மாத்ரே தலைமையில் களம்காணவிருக்கிறது. கிட்டத்தட்ட யு19 ஆசியக்கோப்பை தொடரில் இடம்பெற்ற அணியே உலகக்கோப்பைக்கும் தேர்வுசெய்யப்பட்டது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா விளையாடவிருக்கிறது. அந்த தொடருக்கான இந்தியா யு19 அணிக்கு சூர்யவன்ஷி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆயுஸ் மாத்ரே மற்றும் விஹான் மல்கோத்ரா இருவருக்கும் ரிஸ்ட் இன்ஞ்சுரி ஏற்பட்டுள்ளதால் சூர்யவன்ஷி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
யு19 உலகக்கோப்பைக்கான் இந்திய அணி:
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்கோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன்
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி:
வைபவ் சூரியவன்ஷி (கேப்டன்), ஆரோன் ஜார்ஜ் (துணை கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன், யுவராஜ் கோஹில், ராகுல் குமார்