2025-25 SA20 லீக் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி cricinfo
கிரிக்கெட்

SA20 லீக் ஃபைனல்| பிரேவிஸின் சதம் வீண்.. 3வது முறையாக கோப்பை வென்று சன்ரைசர்ஸ் சாதனை!

2025-26 தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் இறுதிப்போட்டியில் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி கோப்பையை தட்டிச்சென்றது.

Rishan Vengai

SA20 லீக் இறுதிப்போட்டியில் பிரேவிஸ் சதம் அடித்தாலும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் ஸ்டப்ஸ் மற்றும் ப்ரீட்ஸ்கி இருவரும் நிதானமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர்.

2025-26ஆம் ஆண்டுக்கான SA20 லீக்கின் இறுதிப்போட்டி பிரிட்டோரியஸ் கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.

2025 SA20 Final

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கேசவ் மஹாராஜ் தலைமையிலான பிரிட்டோரியஸ் கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 56 பந்தில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என துவம்சம் செய்த டெவால்ட் பிரேவிஸ் சதமடித்து அசத்தினார். SA20 லீக் வரலாற்றில் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்தார் டெவால்ட் பிரேவிஸ்.

டெவால்ட் பிரேவிஸ்

ஆனால் அவரைத்தவிர மற்ற எந்த வீரர்களும் சோபிக்காத நிலையில், 20 ஓவரில் வெறும் 158/7 ரன்களை மட்டுமே அடித்தது கேபிடல்ஸ் அணி.

3வது முறையாக கோப்பை வென்று சாதனை..

159 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் கைக்கோர்த்த கேப்டன் ஸ்டப்ஸ் மற்றும் ப்ரீட்ஸ்கி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்டப்ஸ்

16வது ஓவர் வரை 120 ஸ்ட்ரைக்ரேட்டில் பேட்டிங் செய்த இந்த ஜோடி கடைசி 4 ஓவரில் ஒரு ஓவருக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தபோது அதிரடிக்கு திரும்பியது. ப்ரீட்ஸ்கி 68 ரன்களும், கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 63 ரன்களும் அடித்து அசத்த 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது சன்ரைசர்ஸ் அணி.

2025-26 SA20 பைனல் வென்ற சன்ரைசர்ஸ்

முதலிரண்டு சீசன்களில் கோப்பை வென்ற சன்ரைசர்ஸ் அணி தங்களுடைய 3வது SA20 கோப்பையை வென்று அசத்தியது. மொத்தம் 4 சீசன்களில் 3 முறை சன்ரைசர்ஸ் அணியும், ஒருமுறை மும்பையும் கோப்பையை வென்றுள்ளன.