சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் bcci, hotstar, x

10, 6, 0.. மீண்டும் மீண்டும் ஏமாற்றம்.. முதல் பந்திலேயே 0 ரன்னில் சாம்சன் அவுட்!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் 0 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார் சஞ்சு சாம்சன்..
Published on
Summary

இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், மூன்றாவது டி20 போட்டியில் முதல் பந்திலேயே 0 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இதனால், சுப்மன் கில்லின் வாய்ப்பை இழந்ததற்கு ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியா 154 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், சாம்சனின் தொடர்ச்சியான மோசமான ஆட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர்
இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர்

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடந்துவருகிறது.

சஞ்சு சாம்சன்
ரோகித் சர்மா, ஹர்மன்ப்ரீத் 2 பேருக்கும் பத்மஸ்ரீ விருது.. மொத்தம் 131 பத்ம விருதுகள் அறிவிப்பு!

0 ரன்னில் வெளியேறிய சஞ்சு சாம்சன்..

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 153 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

154 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே பவுல்டாகி 0 ரன்னில் நடையை கட்டினார். முதலிரண்டு போட்டிகளில் 10, 6 என வெளியேறிய சஞ்சு சாம்சன், இந்த போட்டியிலாவது கம்பேக் கொடுப்பார் என்று நினைத்தபோது மீண்டும் டக் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றினார்.

சுப்மன் கில் சரியாக விளையாடவில்லை என வெளியேற்றப்பட்டு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கினால், இவரும் மோசமாக செயல்படுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சு சாம்சன்
இதுக்கு ஏன் சஞ்சுவை அணியில் எடுத்தீங்க.. கில்லின் வளர்ச்சிக்கு இன்னும் எத்தனைபேர் பலியாகணும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com