இலங்கைக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 48 பந்தில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 80 ரன்கள் விளாசிய இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து வரலாற்றில் தடம்பதித்தார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களையும் சேர்த்து 10,000 ரன்களை அடித்த வீராங்கனைகளில், இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ரன்கள்), நியூசிலாந்தின் சுஷி பேட்ஸ் (10,652 ரன்கள்), இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (10,273) என மூன்று வீராங்கனைகளுக்கு பிறகு நான்காவது வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 629 ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 5322 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் 4102 ரன்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 10,053 ரன்களை குவித்து வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உலகசாதனை படைத்துள்ளார்.
மிதாலி ராஜ் 291 இன்னிங்ஸிலும், சார்லோட் எட்வர்ட்ஸ் 308 இன்னிங்ஸிலும், சுஷி பேட்ஸ் 314 இன்னிங்ஸிலும் 10,000 ரன்களை அடித்திருக்கும் நிலையில், 280 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்து வரலாறு படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.