சுப்மன் கில் நீக்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு
சுப்மன் கில் நீக்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடுweb

அரசியல் அழுத்தத்தால் ரிங்கு சிங் தேர்வானாரா..? பலிகடா ஆக்கப்பட்ட கில், ஜிதேஷ்? பரவும் தகவல்!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல் ஒன்று பரவிவருகிறது..
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு, ரிங்கு சிங் சேர்க்கப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல் பரவுகிறது. இதனால் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு, இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த மாற்றங்கள் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இத்தொடருக்கான இந்திய உலகக்கோப்பை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பலமாற்றங்கள் செய்யப்பட்டது முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுப்மன் கில்
சுப்மன் கில்cricinfo

காரணம் சுப்மன் கில்லை உலகக்கோப்பையில் விளையாட வைக்கவேண்டும் என்பதற்காக ஃபார்ம் அவுட்டில் இருந்தபோதும் துணைக் கேப்டன் என்ற பதவி கொடுத்து வலுக்கட்டாயமாக அணியில் திணித்தார் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அவரின் இந்த முடிவால் சுப்மன் கில் அணியில் விளையாடப்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்web

ஆனால் 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக இருந்த சுப்மன் கில் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டது மட்டுமில்லாமல், 15 பேர் கொண்ட ஸ்குவாடிலேயே இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கில்லுக்கு பதிலாக ரிங்கு சிங் இடம்பெற்றிருந்தார். மேலும் ஜிதேஷ் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷன் திடீரென அணிக்குள் எடுத்துவரப்பட்டார்.

இந்தசூழலில் தான் சுப்மன் கில் நீக்கப்பட்டு ரிங்கு சிங் அணிக்குள் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் வலம்வருகிறது.

சுப்மன் கில் நீக்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு
விஜய் ஹசாரே கோப்பை| வெளியான விராட் கோலி, ரோகித் சர்மாவின் சம்பளம்!

ரிங்கு சிங் தேர்வில் அரசியல் தலையீடா..?

ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்லப்படுவது ஒருபுறம் இருந்தாலும், 2026 டி20 உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வு கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடம்பெறவில்லை என்பது ஏற்கனவே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் கம்பீரிடம் சுப்மன் கில் ஏன் நீக்கப்பட்டார் என்ற கேள்வி எழுப்பும்போது, அவர் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

கம்பீர் - சுப்மன் கில்
கம்பீர் - சுப்மன் கில்

இந்தசூழலில் தான் கில் நீக்கப்பட்டதற்கும், ரிங்கு சிங் அணியில் தேர்வுசெய்யப்பட்டதற்கும் நெட்டிசன்கள் தொடர்பு படுத்திவருகின்றனர். பரவிவரும் தகவலில், தேர்வுக்குழு கூட்டத்தில் கூட ரிங்கு சிங்கின் பெயர் பேசப்படவில்லை என்றும், அரசியல் அழுத்தம் காரணமாக கடைசியாக ரிங்கு சிங் அணியில் திணிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் பிசிசிஐயின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா இருப்பதாகவும், அவரும் ரிங்கு சிங்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது சாத்தியப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

மேலும் ரிங்கு சிங்கின் வருங்கால மனைவியான பிரியா சரோஜ் இதற்கெல்லாம் பின்புலமாக செயல்பட்டதாகவும், அவர் உத்தரபிரதேசத்தின் மச்லிஷஹர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலையீடு இருந்ததாக தகவல் பரவி வருகிறது.

சுப்மன் கில் நீக்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு
சூர்யவன்சி இந்திய அணி கேப்டனாக நியமனம்.. யு19 உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பு!

சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா பலிகடா..

அரசியல் அழுத்தம் காரணமாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டதால், ஃபினிசிங் ரோலில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டார். அணியிலிருந்து ஒரு விக்கெட் கீப்பர் நீக்கப்பட்டதால், மற்றொரு விக்கெட் கீப்பரின் தேவை தேர்வுக்குழுவுக்கு சவாலாக இருந்தது. அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் வேண்டும், அவர் ஃபார்மிலும் இருக்கவேண்டும் என்பதால் இஷான் கிஷான் தேர்வுசெய்யப்பட்டார்.

ரிங்கு சிங் - பிரியா சரோஜ்
ரிங்கு சிங் - பிரியா சரோஜ்web

இஷானை அணிக்குள் எடுத்துவர வேண்டுமென்றால் டாப் ஆர்டரில் மட்டுமே அவரை விளையாட வைக்க முடியும், அந்த சூழலில் டாப்பில் விளையாடும் ஒரு வீரரை அணியிலிருந்து வெளியேற்றவேண்டும். அப்படியான சூழலில் தான் சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதில் எந்தளவு உண்மை இருப்பது என்பது தெரியவில்லை, ஆனால் இத்தகவல் சமூகவலைதளத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாவற்றையும் கடந்து சுப்மன் கில்லை விட ரிங்கு சிங்கின் பேட்டிங் திறன் டி20 வடிவத்தில் சிறந்ததாக இருந்துவருகிறது. ரிங்கு சிங் இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடி 550 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 42.30 மற்றும் ஸ்ட்ரைக்ரேட் 161.76 என அபாரமாக உள்ளது. ஆனால் சுப்மன் கில் சராசரி 28ஆகவும், ஸ்ட்ரைக்ரேட் 138ஆகவும் மட்டுமே இருக்கிறது. மேலும் கில்லின் சமீபத்திய டி20 ஃபார்ம் மோசமானதாக இருந்ததால் தான், ரிங்கு சிங் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் என மற்றொரு பக்கம் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சுப்மன் கில் நீக்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வுசெய்யப்பட்டதில் அரசியல் தலையீடு
‘வங்கதேச வீரர் விளையாடினால் பிட்ச்சை பெயர்த்தெடுப்போம்..’ ஐபிஎல் தொடருக்கு மிரட்டல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com