டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் ஒன்று சொல்வார்கள். நாம் எப்போதும் எதிரணியின் வார்த்தைகளுக்கு இரையாகி நமது பொறுமையை இழந்துவிடக்கூடாது என்று. இதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் The Wall என நாம் அழைக்கும் ராகுல் டிராவிட் மிக அழகாகக் கூறுவார். “In Test cricket, patience is not just a virtue – it’s a weapon”.
கேப்டன் கூல் தோனி கூட, “You don’t react to every word the opposition says. You stay calm and focus on your game. That’s what wins you matches, especially in the long format” எனத் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வா, “Mental disintegration is part of the game. But the best players are those who don’t take the bait” எனத் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிட்டத்தட்ட சதுரங்கம்தான். பொறுமை, கட்டுப்பாடு, எதிரணியின் திட்டமிடல்களை எல்லாம் அறிந்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய ஒன்று. கேன் வில்லியம்சன், அலெஸ்டர் குக், அஜிங்க்ய ரகானே, ஹஷிம் அம்லா போன்றோரை உதாரணமாகக் கூறலாம். தற்கால கிரிக்கெட்டில் கூட ஜோ ரூட், கே.எல்.ராகுல் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், ஒரே போட்டியில் இருவரும் தங்களது அமைதியை இழந்த்துதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்திய அணி 1 போட்டியிலும் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு போட்டி டிரா அடைந்திருக்கிறது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. பின் இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
இதற்கிடையே இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, குறிப்பாக ஜோ ரூட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அமைதியே உருவான ஜோ ரூட் தனது பொறுமையை இழந்தது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடிக்கொண்டு இருந்தது. 22 ஆவது ஓவரின் இறுதிக் கட்டத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 21.1 ஓவரில் Crawley அவுட் ஆன நிலையில், ஜோ ரூட் களத்திற்கு வந்தார். 5 பந்துகளை எதிர்கொண்டு ஆடியிருந்த ஜோ ரூட் அப்போது வரை ரன் ஏதும் எடுக்கவில்லை. அப்போது ப்ரஷித் கிருஷ்ணா ரூட்டிடம் ஏதோ சொன்னார். ரூட்டும் எதோ சொல்ல.. அடுத்த பந்தினைப் போட்டார் ப்ரஷித். 22 ஆவது ஓவரின் கடைசிப்பந்து.. அவுட் சைட் ஆஃபில் போடப்பட்ட பந்தை கல்லி பக்கம் அடித்து பவுண்டரியாக மாற்றினார் ரூட்.. பற்றிக்கொண்டது இருவருக்கும்.
பந்தினை பவுண்டரி நோக்கி விரட்டியதும் நேரடியாக பிரஷித்தை நோக்கி வந்தார் ரூட்…. வார்த்தைகள் அனல்கக்கியது போல் வெளிவந்தது. ப்ரஷித்தும் இணைய இருவருக்குமிடையே வார்த்தை யுத்தம் மேலும் வெடித்தது.
வீடியோவில் வீரர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பான தெளிவான காட்சிகள் இல்லையென்றாலும் ரூட்டின் எதிர்வினை அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டியது. நடுவர் குமார் தர்மசேனா உட்பட பலரும் தலையிட்டு நிலைமையை சரிப்படுத்த முயன்றனர். கே.எல்.ராகுல் கூட நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்டதுபோல் தோன்றியது.
பின் 29 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ரூட் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அந்த 29 ரன்களுக்குள் ரூட் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். சொந்த நாட்டில் நடந்த டெஸ்ட் ளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாம் இட்த்தினைப் பிடித்திருக்கிறார். மொத்தமாக 7220 ரன்களைக் குவித்திருக்கிறார் ரூட். 7578 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதலிட்த்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலிலும் ரூட் முதலிட்த்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி, இன்று 29 ரன்களை குவித்த்தன் மூலம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைத் தொட்ட வீர்ராகவும் மாறியிருக்கிறார்.