ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ
ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூpt web

”ஓபிஎஸ் பாவமா?.. ஒரு தலைவரை தரக்குறைவாக பேசக்கூடாது” - சட்டென்று கோபப்பட்ட செல்லூர் ராஜூ!

ஓபிஎஸ் தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ “ஒரு தலைவரை தரக்குறைவாக பேசக்கூடாது” என காட்டமாக பேசினார்.
Published on

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் போர்வெல், நியாவிலைக்கடை மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “அதிமுகவோடு எங்கே கூட்டணியில் இருந்தார்; இப்ப இல்லை. கூட்டணி குறித்து நான் சொல்வதை தான் எடப்பாடி பழனிசாமியும் சொல்கிறார். கூட்டணி என்பது இறுதிக்கட்டத்தில் தான் முடிவாகும். திமுக அதிமுகவில் அப்படித்தான் எப்போதும் நடக்கும். வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணியை அதிமுக பயன்படுத்தி வருகிறது.

”இபிஎஸ்ஸை காண மக்கள் கூட்டம் கடல் போல் வருது”

எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் கடல் அலை போல கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். மக்கள் கடலில் எடப்பாடி பழனிசாமி நீந்தி வருகிறார். 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவது திண்ணமாகிவிட்டது. கிராமப்புறங்களில் கூட மக்கள் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கிறார்கள். அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும்; முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ
சமாதானப்படுத்த முயற்சிக்கிறதா பாஜக.. நயினார் நாகேந்திரன் பேச்சும், ஓபிஎஸ் தரப்பு கொடுத்த பதிலும்!

”என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. கடைசிலதான் தெரியும்..”

பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’பெரிய பெரிய கட்சிகளோடு பேசுகிறோம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ எனக் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

1967-ல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், சுதந்திராக் கட்சி உள்ளிட்ட முரண்பாடான கட்சிகள் கூட்டணி அமைத்தன. அதுபோல தேர்தல் நேரத்தில்தான் எல்லாமே முடிவாகும். சீட் பேரம், தொகுதி ஒதுக்கீடு என எல்லாமே உள்ளது. தேர்தல் நேரத்தில் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போகலாம், கூட்டணி மாறலாம் நிறைய விஷயங்கள் உள்ளது” எனத் தெரிவித்தார்.

முதல்வரை ஒபிஎஸ் சந்தித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஓபிஎஸ் முதல்வரை எத்தனை முறை பார்த்தாலும் அது அவருடைய கொள்கை. பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்து இருப்பார்” எனத் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ
National Awards 2023 | விருதுகளை அள்ளிய ’பார்க்கிங்’.. வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்-க்கு விருது!

”ஒரு தலைவரை தரக்குறைவாக பேசக் கூடாது”

அப்போது செய்தியாளர் ஒருவர் ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது அவர் இருக்கும் நிலை பாவமாக இல்லையா எனக்கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடைந்த செல்லூர் ராஜூ, “ஒரு தலைவரை தரக்குறைவாக பேசக்கூடாது. பாவம் என்றெல்லாம் ஒபிஎஸ்சை செய்தியாளர்கள் சொல்லக்கூடாது. வார்த்தையை அளந்து பேச வேண்டும்” என கடுமையாக பேசி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும், ‘மக்கள் தான் எசமானர்கள். மக்கள் தான் முடிவெடுப்பார்கள்’ என கூறிச்சென்றார்.

ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி To சிறந்த கல்வியாளர் | காலமானார் வசந்திதேவி.. யார் இவர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com